புரட்டாசி ஸ்பெஷல் 07🌲
*********************************
🌹நாலாயிர திவ்ய பிரபந்தம்
***********************************
🚩சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து
உதிர வோட்டிஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்
றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே
🌹விளக்கம்:
🔸சதுரம் என்றால் நான்குபக்கம் என்று மட்டுமல்ல சாமர்த்தியம், திறமை, நேர்த்தி என்ற இன்னொரு பொருளும் உண்டு. சதுர மா மதிள் = சாமார்த்தியமாகக் கட்டப்பட்ட சிறந்த மதில்கள்.
🔸சதுரமான வடிவில் உயர்ந்த மதில்களா ல் சூழப்பட்ட இலங்கை நகரம்; அதன் தலை வனாக (இறைவன் என்பார்கள் அரசனை கம்பன் பலமுறை இச்சொல்லை பயன் படுத்தி இருப்பான்) திகழ்ந்த ராவணன்;
🔸அவன் வீரனாக இருந்தாலும் அதர்ம செயல்களில் ஈடுபட்டதால் ராமனின் கோபத்திற்கு ஆளானான்.
🔸யுத்தத்தில் ராமன் ராவணனை ஓடவிட்டுத் தொலைத்தான். வீரனான அந்த ராமன் காண்பதற்கு அழகிய கடல் வண்ணன்.
🔸இந்த அரங்க நகருள் பெரிய அல்லது சிறந்தவண்டுகள் இனிமையாகப் பாடுகின்றன. சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல ஆடுகின்றன.
🔸இன்று அந்த அரங்கனின் (ராமனின் கம்பீரமான) அழகு என் நெஞ்சத்தில் நிலையாக நின்று, மெல்ல அழகாக பவனி வருகின்றது.
🔸இந்த அரங்கனின் திருவயிற்றைச் சுற்றி உள்ள உதர பந்தம் எனில் தாமோ தரனான (யசோதை கயிற்றினால்; வயிற் றில் கட்டியபோது உண்டான தழும்பு) அவன் வயிற்றுத்தழும்பு எனவும் கொள்ளலாம்.
🔸இன்றும் அரங்கனின் திருமஞ்சனத்தி ன் ப்போது இதைக்கண்டு சேவிக்கலாம். அது அப்படியே என் உள்ளத்தில் உலாவுகின்றது.
🌹 ஶ்ரீரங்கா.. ஶ்ரீரங்கா....
🌹ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...
#🛕புரட்டாசி மாதம் வழிபாடு #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #🙏பெருமாள்
