காதலா'
அலை பாய்ந்த தருணம் அது!
கரையில் பதிந்த
உன் காலடி தடத்தை,
'மணலில் ஒரு கவிதை"
என பெயரிட்டேன்..
ஒரு சிப்பிக்குள்
முத்து கண்ட
அத்தருணத்தில் தான்
கடல் என் கடவுளானது!
மணலை அளந்தபடி
'கடலை பிடிக்குமா'...?
இப்படித்தான்
ஆரம்பித்தாய் நீ..
உன் உதட்டில்
குடியிருந்த
ஒற்றைத் துளியில்
ஆழிப் பேரலை
உருவானது
என் இதயத்தில்!
கடற்கரையோர
நடை பயணத்தில்
தெரியாமல் வேண்டுமென்றே
விழப் போவேன் நான்..
அரவணைத்துக் கொள்ளும்
உன் கரங்களுக்குள்,
தெரிந்து கொண்டே
விழித்துக் கொள்ளும்
என் காதலின் மயக்கம்!
ஒவ்வோரு
விடைபெறுகையிலும்
என் முகத்தில்
ஒட்டிக்கிடக்கும்
உப்பு காற்றின் வாசம்..
உன் முந்தானையில்
ஒளிந்து கிடைக்கும்
என் தவிப்புகளின்
வாசனைகள்!
சிலிர்த்துப் போகிறது கடல்..
வந்து போன
அலையில்
ஒட்டிக் கிடக்கிறது
என் காதல்..
சென்று வரும்
பேரலையில்
கரைந்து போகின்றன
என் ஏக்கங்கள்!!
🌹🌹🌹 #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
