ShareChat
click to see wallet page
#தெரிந்து கொள்வோமா 🤔 #நலம் வாழ #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 அலுமினிய பாத்திரங்கள் உபயோகிக்கலாமா...?? - விழிப்புணர்வு பதிவு!! அலுமினியக் கலவை உடலில் அதிகரிக்கும் போது எலும்பு தொடர்பான நோய், நரம்பு பிரச்சனை, மன நல பிரச்சனைகள், புற்றுநோய், சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். அலுமினிய பாத்திரங்களில் சமைப்பது புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வுகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், சமீபத்தில் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் அலுமினிய பாத்திரங்களில் ஜெனோடாக்சிக் என்னும் கெமிக்கல் கசிவதாக கண்டறியப் பட்டுள்ளது. இருப்பினும் வீடுகளில் பயன்படுத்தும் பாத்திரங்களில் புற்றுநோய் உண்டாகும் என்கிற நிரூபணமான ஆய்வுகள் இல்லை. ஆய்வில் அதிகமாக அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது அதிலிருந்து அலுமினியம் கசிவதாக கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக அசிடிக் உணவுகள், நீண்ட நேரம் சமைத்தல், தரமற்ற அலுமினிய பாத்திரங்கள், நீண்ட வருடங்களாக பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆகியவற்றில் இந்த அலுமினிய கசிவு அதிகமாக உள்ளது. இந்த கசிவு உணவில் கலந்து வயிற்றில் பலவகையான பிரச்சனைகளை உருவாக்குகிறது. நீண்ட வருட நுகர்வு புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வு கூறுகிறது. அதாவது அலுமினியக் கலவை உடலில் அதிகரிக்கும் போது எலும்பு தொடர்பான நோய், நரம்பு பிரச்சனை, மன நல பிரச்சனைகள், புற்றுநோய், சிறுநீரகம் செயலிழத்தல் உள்ளிட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். நீண்ட வருடங்களாக பயன்படுத்தும் பழைய அலுமினிய பாத்திரங்களில் சுடு தண்ணீர் கொதிக்க வைத்தாலும் அதில் சைடோடக்சிக் மற்றும் ஜினோடாக்சிக் என்னும் நச்சுகள் தண்ணீரில் கலக்கும். அதை தொடர்ந்து குடித்து வந்தால் புற்றுநோய் வர வாய்பு அதிகம் என கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதாக கூறப்படுகிறது. எனவே அலுமினிய பாத்திரங்களை தவிர்த்து அதிக எடை கொண்ட ஸ்டீல் பாத்திரங்கள், இரும்பு, மண் பாத்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது. இந்த அலுமினிய கசிவு என்பது பாத்திரங்களுக்கு மட்டுமல்ல பேக்கிங் செய்ய பயன்படுத்தப் படும் அலுமினியம் ஃபாயில் மூலமாகவும் அலுமினியம் கசியும். வீட்டில் கைக்குழந்தை, வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தால் அலுமினிய பாத்திரம் பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் அவர்களுக்கு எளிதாக கிட்னி செயலிழப்பு உண்டாவதாக கண்டறியப் பட்டுள்ளது. எனவே இன்றே நீங்கள் செய்யும் சிறு மாற்றம் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
தெரிந்து கொள்வோமா 🤔 - ருபோதும் சமையலுக்கு அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தாதீங்க. . எச்சரிக்கும் நிபுணர்கள். ! ருபோதும் சமையலுக்கு அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தாதீங்க. . எச்சரிக்கும் நிபுணர்கள். ! - ShareChat

More like this