#பக்தி புனர்பூசம் நட்சத்திரம்.திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சீதாபிராட்டி சமேத யோகராமர்🙏🙏 லக்ஷமணர் சகிதமுடன்.கருவறையிலேயே ஆஞ்சநேயர் இருப்பது சிறப்பு
*தமிழகத்திலேயே பெரிய அளவில் ஸ்ரீராமர் உள்ள தலம்
*இலங்கை போர் முடித்து விட்டு வந்ததால் கையில் வில் அம்பு ஆயுதங்கள் இல்லாமல் ஸ்ரீராமர் யோகநிலையில் காட்சி தருகிறார்
*குழந்தைப்பேறு வேண்டிய வியாசரிஷிக்கு கிளி தலையுடன் சுகபிரம்ம ரிஷி பிறந்தார்
*சிவ,ராமபக்தரான சுகப்ரம்மரிஷி முன் தோன்றிய சிவபெருமான் ஸ்ரீராமர் இலங்கை இராவணனை வென்று வருகையில் அவரை தரிசித்தால் ஞானம் கிடைக்கும் என சுவடியும் தந்து போதிக்கிறார்
*தீர்க்காசலம் எனும் நெடுக்குன்றம் வந்து தவமிருக்கிறார் ரிஷி.சுவடியில் உள்ள வேதப்பொருள் அவருக்கு விளங்கவில்லை
*அயோத்தி திரும்புகையில் அவ்வழியே வந்த ஸ்ரீராமர் சுகர் வேண்ட அங்கு தங்குகிறார்
*சுகரிஷி ஓலைச்சுவடியில் உள்ள பொருளை விளக்கும்படி கூற ஸ்ரீ ராமர் சின்முத்திரையுடன் நெஞ்சில் வலது கையை வைத்து ஆஞ்சநேயரை ஓலைச்சுவடியை படிக்கச் சொல்கிறார்
*வேதப்பொருள் அர்தத்தை புரிந்து கொண்ட சுகப்ரம்மரிஷி அதே கோலத்திலேயே இங்கு ஸ்ரீ ராமர் காட்சி அருள வேண்டுகிறார்

