ShareChat
click to see wallet page
நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத்  தேவை ? தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை ! தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை ! ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை ! அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை ! அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள்  தேவை ! அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை ! துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை  ! ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை ! நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன்  அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை ! எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில  நண்பர்கள் தேவை !  இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய்  உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக  இருந்தால் உலகில் இதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை. அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் ! 🌹 #அன்பு நண்பர் #நண்பர் கூட்டம்
அன்பு நண்பர் - ShareChat

More like this