சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள் இனியும் அலட்சியம் வேண்டாம்.
நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை என்பது மகத்தானது.
அதை கண்டுகொள்ளாமல் விடுவது நமக்கு மிகப்பெரும் பின் விளைவுகளை உண்டாகும்.
குறிப்பாக சிறுநீரக நோயாள் அவஸ்தை ஏற்பட கூடும். இதனை முன்கூட்டியே அறிந்து கொண்டு இதிலிருந்து விடுதலை பெற வேண்டும்.
இதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ள முடியும்.
தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பொதுவான அறிகுறியாக இருக்கிறது.
காரணம் சிறுநீரகமானது சரியான முறையில் நச்சுக்களை வடிகட்ட முடியாமல் போனால்
அவை இரத்தத்தில் கலந்து தங்கிவிடுகின்றன. இதனால் சிறுநீரகம் வழியாக வெளியேர முடியாமல் அவை இரத்ததிலேயே தங்குவதால் தூக்கமின்மை பிரச்னை வருகிறது.
நீங்கள் சமீப நாட்களாக சரும பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்கிறீர்கள் எனில்
அதற்கு சிறுநீரகம் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.
சருமத்தில் கடுமையான வறட்சி, அரிப்பு போன்றவை
நீரிழப்பு மற்றும் எலும்பு பாதிப்புகளை உணர்த்தும்.
சிறுநீரக நோய்கள் பெரியோர்பிடல் எடிமாவை ஏற்படுத்தும், இது கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும்.
கண்களைச் சுற்றியுள்ள இந்த வீக்கம் சிறுநீரகத்திலிருந்து அதிக அளவு புரதத்தை உடலில் வைத்திருப்பதற்கு பதிலாக
சிறுநீர் வழியாக வெளியேற்றுவதன் காரணமாக இருக்கலாம். சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு பொதுவானது.
உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி பிடிப்புகள் ஏற்படுகின்றன.
பிடிப்புகள் நரம்பு சேதம் மற்றும் இரத்த ஓட்ட பிரச்சனைகளாலும் ஏற்படுகின்றன. பலவீனமான சிறுநீரக செயல்பாடு காரணமாகவும் இருக்கலாம்.
சில நேரங்களில் சிறுநீரகங்கள் கூடுதல் திரவத்தை அகற்ற முடியாமல் போகும்போது, அது சில நேரங்களில் கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் கைகளில் வீக்கத்தை உண்டாக்குகிறது.
சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுவது சிறுநீரக நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தால், சிறுநீரக நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சிறுநீரக வடிகட்டிகள் சேதமடைந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க தூண்டும்.
கடுமையான பசி மற்றும் எடை இழப்பு ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
உலகிலேயே விலை மதிக்க முடியாத சொத்து நமது உடல் அவற்றை பாதுகாத்துக் கொள்வது நமது முதல் கடமை.
உங்கள் உடலை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
#🏋🏼♂️ஆரோக்கியம்

