குழந்தை
நடக்கத் துவங்கியதும்
வீட்டிலுள்ளவர்களை
ஓட வைத்துவிடுகிறது.
எல்லா
வேலையையும்
இழுத்துப் போட்டு
செய்பவர்கள் பெரியவர்கள்,
இழுத்துப் போடுவதையே
வேலையாய்ச் செய்பவர்கள்
குழந்தைகள்...!
ஏதோ ஒரு புரியாத
தேவமொழியில்
என்னிடம் பேசிக்
கொண்டிருந்தது குழந்தை,
வளர்ந்து தொலைத்த
வருத்தத்தோடு கேட்டுக்
கொண்டிருந்தேன் நான்.
அம்மாவிடம் அடி வாங்கி
பாட்டியிடம் ஆறுதல்
தேடிய நாட்கள்...
இன்றைய சந்ததிக்கு
பெரும்பாலும் கிடைக்கவில்லை.
என்னவெல்லாமோ
ஆகனும்னு ஆசைப்பட்டு
கடைசியில்...
"குழந்தையாகவே
இருந்திருக்கலாம்" என்ற
ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை.
*இனிய...*
*குழந்தைகள்*
*தின வாழ்த்துகள்.* #குழந்தைகள் தினம்
