#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று டிசம்பர் 3
1994 - முதல் ப்ளேஸ்டேஷன் கருவியை ஜப்பானிய நிறுவனமான சோனி அறிமுகப்படுத்திய நாள் டிசம்பர் 3.
. உண்மையில், நிண்ட்டெண்டோ நிறுவனம், தனது நிகழ்பட விளையாட்டுக் கருவியில்(வீடியோ கேம் கன்சோல்), குறுவட்டை(சிடி) பயன்படுத்துவதற்கான ஒரு துணைக் கருவியைத் தயாரித்துத் தருமாறு சோனியுடன் 1988இல் செய்திருந்த ஒப்பந்தத்திற்காக, சோனி உருவாக்கியிருந்த கருவிதான் இதற்கு அடிப்படையாக இருந்தது. 1977இல் 'கலர் டிவி-கேம்' என்ற நிகழ்பட விளையாட்டின்மூலம் அத்துறையில் நுழைந்திருந்த ஜப்பானிய நிறுவனமான நிண்ட்டெண்டோ, 1985இல் அத்துறையின் முன்னணி நிறுவனமாகியிருந்தது. அக்காலத்தில், நிகழ்பட விளையாட்டுகளுக்கான ஊடகமாகப் பயன்படுத்தப்பட்ட கேர்ட்ரிட்ஜ் வெறும் 12-15 எம்பி இடவசதியை மட்டுமே கொண்டிருந்ததால், 650 எம்பி இடமுள்ள சிடி, அத்துறைக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. ஏற்கெனவே இத்துறையின்மீது ஆர்வம் கொண்டிருந்த சோனி, தான் உருவாக்கும் கருவியின்மூலம் விளையாடப்படும் குறுவட்டுகளின் காப்புரிமை தன்னிடமே இருக்கும்படி அந்த ஒப்பந்தத்தைச் செய்திருந்தது. இதன்மூலம் தனது விளையாட்டுகளின்மீதான கட்டுப்பாடு சோனியிடம் சென்றுவிடும் என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்ட நிண்ட்டெண்டோ, டச்சு நிறுவனமான ஃபிலிப்சுடன் ரகசியமாக ஒப்பந்தம் செய்துகொண்டது. அமெரிக்காவின் லாஸ்வேகசில், 1991இல் நடைபெற்ற கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில், சோனியுடனான ஒப்பந்தத்தை அறிவிக்கவேண்டிய நேரத்தில், ஃபிலிப்சுடனான ஒப்பந்தத்தை அறிவித்தபோதுதான் சோனிக்கு இது தெரிந்தது. அதிர்ச்சி அடைவதற்கு பதிலாக, வாய்ப்பாக எடுத்துக்கொண்ட சோனி, நிண்ட்ணெ;டோவின் வீடியோகேம் கன்சோலுக்காக உருவாக்கியிருந்த சிடி ப்ளேயருக்கு, தானே புதிதாக உருவாக்கிய வீடியோகேம் கன்சோல்தான், ப்ளேஸ்டேஷன் (ஒப்பந்தத்தில் ப்ளே ஸ்டேஷன் என்றிருந்தது!) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. வீடியோகேம் கருவியாக மட்டுமின்றி வழக்கமான சிடி ப்ளேயராக பாடல்கள் முதலானவற்றையும் இயக்கிய இந்தக் கருவி, வரலாற்றிலேயே 10 கோடி விற்பனையான முதல் கேம் கன்சோலாக வெற்றியடைந்து, நிண்ட்டெண்டோவுக்கு சோனியை சிம்மசொப்பனமாக்கியது. பத்தாண்டுகளாக இந்தக் கருவி கோலோச்சியபின், 2004இல் அறிமுகப்படுத்திய ப்ளே ஸ்டேஷன் 2 என்ற இரண்டாவது கருவி பதினைந்து கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி, அதிகம் விற்பனையான வீட்டு விளையாட்டுக் கருவியாக இன்றுவரை திகழ்கிறது. கையில் எடுத்துச் செல்லும் ரகத்தில் ப்ளே ஸ்டேஷன் போர்ட்டபிள் என்ற கருவியையும் சோனி உருவாக்கினாலும், அத்துறையில் நிண்ட்டெண்டோதான் முதலிடத்திலிருக்கிறது. சோனியின் ஊழியராக இருந்துகொண்டே நிண்ட்டெண்டோவின் விளையாட்டுக் கருவிகளுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்த கென் குட்டரகியை பணிநீக்கம் செய்யுமளவுக்குச் சோனி சென்றிருந்தாலும், ஒப்பந்தம் முறிந்தபின் சோனியின் ப்ளேஸ்டேஷன் உருவாக வழிகாட்டியாக இருந்த அவர்தான் ப்ளேஸ்டேஷனின் தந்தை என்று புகழப்படுகிறார்!
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

