ShareChat
click to see wallet page
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈 👉 தனது துன்பத்திற்கு காரணம் யார் 👈 சிலர் தனது செயலால் துன்பம் விளையவில்லை தனது துன்பத்திற்குக் காரணம் பிறரே என எண்ணுகின்றனர்...!! எவரும் எவருக்கும் எத்தகைய கெடுதலும் தனது விருப்பம் போல் செய்துவிட முடியாது தனக்கு வரக்கூடிய இன்பமோ துன்பமோ லாபமோ நட்டமோ புகழோ இகழோ வரவோ செலவோ தன்னுடைய செயலிலே இருந்துதான் பிறக்க முடியுமே தவிர வேறு எங்கிருந்தும் வராது...!! ஒவ்வொருவரிடமும் வினைப்பதிவுகள் (sins and imprints) உள்ளன அப்பதிவுகளை வெளியாக்கித் தூய்மைப்படுத்த வேண்டியது இயற்கையின் நியதி (Law of Nature) தனது தவறான செயல்கள் மூலமாகவும் தனக்குத் துன்பம் விளைந்து வருந்தி அப்பதிவுகள் நேர் (Balance) செய்யப்படலாம் பெரும்பாலும் இயற்கை வேற்று மனிதர் செயலின் மூலமே அப்பதிவுகளை வெளிக் கொண்டு வருகிறது...!! ஒருவர் இன்னொருவருக்குத் தீமை செய்கிறார் அல்லது துன்பம் அளிக்கிறார் என்றால் இயற்கை அவரது வினைப்பதிவை வெளிக் கொணடு வர இன்னொருவரை கருவியாக உபயோகிக்கிறது என்றுதான் பொருள்...!! எனவே தீமை செய்தவர் தானே விரும்பி இன்னோருவருக்கு துன்பம் அளித்தார் என்று கருதுவதை விட துன்பம் கண்டவரின் வினைப்பதிவை இயற்கை தனது ஒருங்கிணைந்த பேராற்றலினால் இன்னொருவர் மூலம் வெளிக்கொணர்ந்து நேர் செய்து விட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
00:14

More like this