ShareChat
click to see wallet page
🌹இன்று 28.09.2025 🌹நவராத்திரி 7-ம் நாள் வழிபாடு.. ***************************************** 🌹சங்கடங்கள் தீர்க்கும் சாம்பவி தேவி திருக்கோலம்... 🚩சிவபெருமான் சாம்பு என்ற திருநாமத் தால் துதிக்கப்படுபவர். சாம்புவின் மனை வி சாம்பவி ஆகிறாள். மேலும் சாம்பவி என்னும் திருநாமத்துக்கு, உதவிகரமான வள், அன்பானவள், கருணையுள்ளம் கொண்டவள் என்னும் பொருள்களைக் கூறுகின்றன சாஸ்திரங்கள். நவராத்திரி நாயகியாம் லலிதா பரமேஸ் வரிக்கு ஆயிரம் நாமங்கள். அதில் ஒவ்வொரு நாமமும் ஒரு தனித்துவம் வாய்ந்தது. அம்பிகையின் அற்புதங்களை எடுத்துரைப்பது. அப்படி ஒரு நாமம்தான் சாம்பவி என்பது. நவராத்திரியின் ஏழாம் நாளில் நாம் சாம்பவி என்னும் திருக்கோ லத்தில் அம்பிகையை ஆராதிக்க வேண்டும். லலிதா சகஸ்ரநாமத்தில் 122 ம் நாமமாக விளங்குவது சாம்பவி. விஷ்ணு சகஸ்ர நாமத்தில் 38வது நாமமாக விளங்குவதும் இந்தத் திருநாமமே. இவை இரண்டுமே பக்தர்கள் மீது எல்லையில்லாக் கருணை யுள்ளவள் என்னும் பொருளிலேயே வழங்கப்படுகின்றன. 🌹ஏழாம் நாள் : 28.09.2025 வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்) பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும். திதி : சப்தமி கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை. நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு. ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும். பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும். 🌹சரஸ்வதி தேவி சண்ட முண்டர்களை வதைத்த பின் தேவி பொன் பீடத்தில் அமர்ந்து, வீணை வாசிக் கும் கோலமே சாம்பவியின் திருக்கோலம் கைகளில் வீணை ஏந்திக் காட்சி அருளி னாலும் அன்னையின் வீரமான தோற்றம் மனதில் இருக்கும் பயங்களைப் போக்க வல்லது. இந்த நாளில் அன்னை வழிபடுபவர்களு க்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்குவ தோடு வாழ்க்கையில் இருக்கும் சங்கடங் கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. 🌹 நவராத்திரி 7 ஆம் நாள் மகிமையை விளக்கும் கதை. முற்காலத்தில் ஆங்கீரஸ முனிவர் ஒரு நாள் வனத்தின் வழியே செல்லும்போது ஒரு பெண் அழும் சத்தம் கேட்டுத் திடுக்கி ட்டார். சத்தம் கேட்ட திசை நோக்கிச் சென் றார். அங்கே ஒரு குடிசையில் ஒரு பெண் தன் கணவரை மடியில் கிடத்தி, கண்ணீர் வடி த்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட முனிவர் வெளியிலிருந்தபடியே குரல் கொடுத்தார். முனிவரின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள். அந்தப் பெண்ணின் முகத் தோற்றத்திலி ருந்து அவள் அரச வம்சத்தை சேர்ந்தவள் என்று புரிந்துகொண்டார் முனிவர். "பெண்ணே, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார் முனிவர். அதற்கு அந்தப் பெண், தான் அண்டை நாட்டின் அரசி என்றும், சதிகாரர்கள் என் கணவரை ஏமாற்றி ராஜ்ஜியத்தைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டதாகவும், தன் கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள். தன் கணவர் நலமடைய வேண்டும் என்று முனிவரைப் பிரார்த்தித்தாள். மேலும் தாங்கள் இழந்த ராஜ்ஜியம் திரும்பக் கிடைக்கவேண்டும் என்றும், தங்களுக்கு ஓர் ஆண்குழந்தை வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளுடைய நிலைக்கு மனம் வருந்திய முனிவர், ஒன்பது தினங்கள் அம்பிகைக் கு பூஜை செய்யும் நவராத்திரி வைபவத் தின் மகிமையை எடுத்துச் சொல்லி அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் வழியையும் கூறினார். முனிவரின் ஆசிரமத்தில் தங்கி பூஜை யை நிறைவேற்றினாள் அந்தப் பெண். அம்பிகை அந்தப் பெண்ணின் பூஜைக்கு மகிழ்ந்து அவள் வேண்டியபடி அவள் கணவனுக்கு ஆரோக்கியத்தையும் புத்திர பாக்கியத்தையும் அருளினாள். அவர்களின் மகன் வளர்ந்து பெரியவனாகி போர்க்கலையில் சிறந்து விளங்கினான். உரிய காலத்தில் முனிவர் அவனுக்கு கடந்த காலத்தில் நிகழ்ந்ததை விளக்கிச்சொல்ல அவன் போர்தொடுத்து தன் தந்தை இழந்த நாட்டை வென்றான். அவன் பெற்றோரும் முனிவரும் வென்ற நகரின் தலைநகருக்குச் சென்று அவனுக் குப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அந்த பெண் தான் விடாது செய்துவந்த நவராத்திரி பூஜையின் பலனே இது என்பதை உணர்ந் து அதை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க உத்தரவிட்டாள். இழந்த பொருள், உரிமை, பலம் ஆகியவ ற்றை வேண்டிப் பெற உரிய விரதம் நவராத்திரி விரதம் என்பதை நாட்டு மக்களும் அறிந்துகொண்டனர். 🌹 வழிபடும் முறை இன்றைய தினம் எட்டு வயது பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக் கையில் நம் வீட்டுக்கு அழைத்து, அவர்க ளை சாம்பவியாக பாவித்து பூஜித்து, எலு மிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானி யத்தில் செய்த சுண்டலையும் அம்பிகை க்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கலாம். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நிலைத்த புகழும் அஷ்ட ஐஸ்வர்ய ங்களும் கிடைக்கும் என்பது நமபிக்கை. இந்த நவராத்திரி நன்னாளில் தேவி பராசக்தியை சாம்பவியாக வழிபட்டுச் சரணடைந்து நம் சங்கடங்கள் தீர்ந்து வாழ்வோம். 🌹சரஸ்வதி தேவி சரணம்... 🌹நவராத்திரி நாயகியே போற்றி.... 🌹28.09.2025.. நேசமுடன் விஜயராகவன்.... #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள்
🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 - அன்னை சாம்பவிஅருளால்சகல சவுகரியங்களும்கிடைக்கும் அனைத்தும் விஜயராகவன் தெளிவாகும் ஆனந்தம்தாண்டவமாடும் இறையருள்கூடும் ஈரேழு உலகமும்துணை விஜயராகவன் நிற்கும் உண்மை விளங்கும் ஊரேஉன்னை கொண்டாடும் எப்போதும்வெற்றியே. ஏகாந்தமாய் மலர்ந்திருப்பாய். அன்னை சாம்பவிஅருளால்சகல சவுகரியங்களும்கிடைக்கும் அனைத்தும் விஜயராகவன் தெளிவாகும் ஆனந்தம்தாண்டவமாடும் இறையருள்கூடும் ஈரேழு உலகமும்துணை விஜயராகவன் நிற்கும் உண்மை விளங்கும் ஊரேஉன்னை கொண்டாடும் எப்போதும்வெற்றியே. ஏகாந்தமாய் மலர்ந்திருப்பாய். - ShareChat

More like this