ஏனோ தெரியவில்லை மனதை ஒருநிலைப்படுத்த ஏதேதோ செய்வேன் சில நேரங்களில் அமைதியாக செல்லும் சில நேரங்களில் மனம் சஞ்சலங்களில் அலைமோதும்.....
உனக்கொன்று தெரியுமா ❓❓❓
என் தாய் வீட்டிற்கு செல்லவோ அல்லது அங்கு ஏதாவது நல்ல விஷயங்களுக்கு அழைத்தாலும் வேண்டும் என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி நிராகரித்து விடுவார்கள் ஏனோ தெரியவில்லை இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக என் அம்மா வழி குடும்ப கோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்ததால் மனதிற்குள் ஏதேதோ இனம் புரியாத மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தது மட்டற்ற மகிழ்ச்சியில் ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை நேற்று சூரசம்காரம் அம்மா வழி தாத்தா கட்டிய முருகன் கோவிலில் விசேஷமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற சூரசம்ஹாரத்திற்கு
செல்லும்பொழுது முருகனுக்கு அதாவது முருகனை செவ்வாய் என்றும் செவ்வாய்க்கு அதிபதி என்றும் கூறுவார்கள் ஆகையால் முருகனுக்கு சிவப்பு நிறம் என்பதால் நேற்று சிவந்த நிற புடவையும் இன்று வள்ளி திருமணத்திற்கு பச்சை நிற புடவையும் கட்டிச் சென்றேன் கோவிலில் வந்த அனைத்து உறவினர்களும் சொந்தங்களும் சிவப்பு நிற ஆடையில் காஞ்சி காமாட்சியை போல இருக்கிறாய் என்றும் பச்சை நிற புடவையில் மதுரை மீனாட்சியைப் போல இருக்கிறாய் என்று சொல்லி வைத்தார் போல ஒரே போலவே பலரும் கூறினார்கள் என்னவோ தெரியவில்லை. அந்த நொடியில் எல்லாம் நீ தான் என் கண் முன்னே வந்து சென்றாய் ஏனோ தெரியவில்லை வீட்டிற்கு வந்த பிறகு மனம் ஏதோ ஒன்றை நினைத்து பரிதவித்தது ஏன் என்று தெரியவில்லை.......
நாளை மீண்டும் புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் இனி எப்பொழுது இங்கு வருவேன் ❓
என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும்......❗❓
#📝என் இதய உணர்வுகள்

