அன்பே வா சீரியல் மூலம் அறிமுகமான நடிகர் விராட் சமீபத்தில் அவருடைய காதலியை திருமணம் செய்திருந்தார். ஆனால் விராட்டின் மனைவிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் ஆகி 15 வயதில் மகள் இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் விராட் திருமணம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
இவருடைய நீண்ட நாள் காதலியான நவீனா என்பவரை மகாபலிபுரத்தில் வைத்து விராட் திருமணம் செய்திருந்தார்.
விராட்டின் மனைவி நவீனா ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட்.
இந்நிலையில் விராட் கூறும்போது திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்கவில்லை. அதற்கு காரணம் என்னுடைய மனைவி என்னை விட ஐந்து வயது மூத்தவர் என்பது ஒரு காரணம்.
மேலும் விவாகரத்து ஆனவர் என்பதும் ஒரு காரணம்.
அதோடு அவருக்கு முதல் திருமணத்தில் 15 வயதில் ஒரு மகள் உள்ளார். அதனால் பலர் விவாகரத்து ஆகி 15 வயதில் மகளுடன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என்று அட்வைஸ் கொடுத்தார்கள். என்னுடைய அம்மாவும் என்னுடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு அம்மா சம்மதித்து திருமணம் நடைபெற்றது.
மனைவி நவீனா பேசுகையில் ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு என்னுடைய வளர்ச்சிக்கும் எனக்கு ஆதரவாகவும் விராட் இருந்து வருகிறார்.
எனக்கு ஒரு நல்ல அப்பா கிடைத்து இருக்கிறார், அம்மாவுக்கு நல்ல கணவராக விராட் டாடி இருப்பார்னு முதல் மனைவியின் மகள் கூறியுள்ளார்.
#sharechat #status #cini pics #news

