ShareChat
click to see wallet page
உண்மையிலே பைசன் படத்துல இது ஒரு நல்ல காட்சி...ஏன்னா...ஹீரோவோட திறமையை பார்த்து தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்த மனிதர் அவர் கிளப்ல விளையாட சேர்த்துக் கொள்வார்...அப்பக்கூட சில பேர் வேண்டாமென்று தடுப்பார்கள்... விளையாட்டுல திறமைக்கு முன்னாடி நான் வேறெதையும் பார்க்க மாட்டேன்னு அந்த கதாபாத்திரத்தில் நடித்த மனிதர் சொல்லுவாரு... 🫡🫡👏👏பிரச்சனைகள் வந்தவுடன்...இத்தனை நாள் இங்க ஏன் டீமுக்காக நீ விளையாண்ட... இனிமேல், தொடர்ந்து இங்க நீ விளையாண்ட உனக்கு பிரச்சனை....உன் எதிர்காலம்... உன் முன்னேற்றம் பாதிக்கும்... நீ வேற எங்காவது போய் விளையாடணும்... விளையாடுறத மட்டும் நிறுத்தக் கூடாது...என் கூட இருந்தா... உன் திறமை...உன் நோக்கம்... வீணாயிடும்... உன்ன மேல வர விட மாட்டானுங்க...நீ திறமையானவன்.. உன் திறமை வீணாயிடக் கூடாது... வேறொரு டீம்ல நீ விளையாட நான் பேசியிருக்கேன்...அங்க போய் நீ சேர்ந்து விளையாடணும்... பெரிய அளவுல வரணும்...அந்த செய்தியை கேட்டா எனக்கு அதுவே போதும்... உண்மையிலே.. விளையாட்டை நேசிக்கிற... விரும்புற...ரசிக்கிற... திறமையை..மதிக்கிற... மனிதரால மட்டும் தான் இப்படி சொல்ல முடியும்... இந்த காட்சி உண்மையிலே 👌👌👌👌 Vera level... ஒரு team..ல இருந்து..இன்னொரு team...க்கு விளையாட முடிவெடுக்கணும்னா...அதுக்கு பின்னாடி இருக்கிற காரணத்தை முதல்ல புரிஞ்சுக்கணும்... இந்தக் காட்சியில தெளிவா புரிய வச்சிருப்பாங்க... சந்தர்ப்ப சூழ்நிலை..தொடர்ந்து அங்கேயே இருந்தா...ஏற்படக்கூடிய பிரச்சனைகள்... இவற்றை தவிர்க்க...வேறு வழியில்லாமல் வேற team-ல போய் விளையாட முடிவெடுத்து போனா... உண்மையான காரணத்தை தெரிஞ்சிக்காம..அவன் எப்படி ஏன் team-ல இருந்து...அங்க போய்...விளையாடலாம்... வளரலாம்... சாதிக்கலாம்...விட மாட்டேன் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிபவர்களை தான் நான் என் நிஜ வாழ்க்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... நான் தான் அவன் இவ்வளவு தூரம் வந்ததுக்கு காரணம்...என வாய்ப்புகளை... தட்டி விடுவது...இல்லாத பொல்லாத விசயங்களை தவறாக பரப்பி விடுவது... கூட்டணி போட்டு சூழ்ச்சி செய்வது... வன்மம்.. வஞ்சகம் கொண்டு பழி வாங்குவது... எதிரிக்கு எதிரி நண்பன் என கூட்டு சேர்ந்து ஒழித்துக் கட்ட நினைப்பது இப்படிப்பட்ட மனிதர்களை நடைமுறையில் பார்த்து..பார்த்து....வெறுத்த என் போன்றோருக்கு படத்தில் இது போன்ற காட்சிகளை பார்க்கும் போது சற்று ஆறுதலாக இருந்தது... இப்படி திறமையை மதிக்கும்... வளர்த்து விட நினைக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள்.. இந்தக் காட்சியில...ஒண்ணு மட்டும் நன்றாக தெரிந்தது..அந்த கதாபாத்திர மனிதர் ஹீரோ ஏங்கிட்டயே இருந்து அழிஞ்சு போகட்டும்ன்னு நினைக்கல... அவரோட தனிப்பட்ட பிரச்சனையில ஹீரோவ இழுத்து விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கல...இது என் பிரச்சனை...இதுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை... என தன் தனிப்பட்ட பிரச்சனையால ஹீரோவோட திறமை நசுக்கப்படக் கூடாதுன்னு அந்த மனிதர் நினைச்சாரு...அதனால சூழ்நிலையை விளக்கி... எங்க போய் விளையாண்டாலும் பெரிய அளவுல வரணும்.. உயரணும்னு சொல்லி அனுப்பி வைக்கிறாரு...🫡🫡 திறமையை மதிப்பவர்களுக்கான குணாதிசய பிரதிபலிப்பு அந்த கதாபாத்திரம்....👌👌👌உண்மையிலே vera level... காட்சி #👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - ShareChat
00:05

More like this