💞அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கற்றுத் தந்த துஆ!
அல்லாஹ்வே! நான் நல்வழி பெற்றோரின் தவ்பீக்-நல்லுதவியை,
,ஈமான் உறுதியுடையோரின் நல்லமல்களை,
தவ்பா செய்தோரின் தூய எண்ணத்தை,
பொறுமையாளரின் அசையாத உறுதியை,
அச்சம்கொண்டோரின் முயற்சியை,
ஆசைகொண்டோரின் தேடலை,
பேணி நடப்போரின் வணக்கத்தை,
கல்வியாளரின் ஆத்ம ஞானத்தை,
உன்னை நான் சந்திக்கும் வரை
பெற்றிருக்க உன்னிடம் கேட்கிறேன்.
எங்கள் அல்லாஹ்வே!
உனக்கு மாறு செய்வதை என்னை வெறுக்கச்செய்யும் அச்சத்தை என்னுள் உருவாக்க உன்னிடம் கேட்கிறேன்.
அந்த அச்சம் உன் திருப்பொருத்தத்தை பெற என்னைத் தகுதி பெறச்செய்யும் நல்லமல்களை, நான் செய்ய என்னைத் தூண்டும் அளவு வேண்டும்.
அந்த அச்சம ,உனக்கு பயந்து தூய்மையான தவ்பா செய்யும் அளவு வேண்டும்
அந்த அச்சம் உனக்காக வெட்கமடைந்து மனத்தூய்மையை உனக்காகவே ஆக்கும் அளவு வேண்டும்
எல்லா காரியங்களிலும் உன் மீதே நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற
உன் மீதே நல்லெண்ணம் ஏற்படுத்துகின்ற
உனக்கு மாறு செய்வதைத்
தடுக்கின்ற இறை அச்சத்தைக் கேட்கிறேன்,
------(தப்ரானி)
رَبِّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ
ரப்பிஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்ஸுக்னீ, வர்ஃபஃனீ
யா அல்லாஹ் !என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்கு ரிஜ்க்களிப்பாயாக ! எனக்கு உயர்வை அளிப்பாயாக!
யா அல்லாஹ்!
وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்”
(அல்குர்ஆன் : 7:156)
ஆமீன் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
