#🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள்
இன்றுள்ள பல நடிகைகளுக்கு தங்களைப் பற்றி எழுதும் திரைப்பட பத்திரிகையாளர்களின் பெயர் என்ன, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் பெயர் என்ன என்று தெரியாது. சீனியர் நடிகைகள் பலர், திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு முதலில் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களை வைத்தும், பிறகு அந்த திரைப்பட பத்திரிகையாளர்கள் தங்களிடம் பேசிப் பழகும் தன்மையை வைத்தும் நினைவில் வைத்துக்கொள்வார்கள். நான் திரைத்துறைக்கு வந்து 40 வருடங்களாகி விட்டது. முன்னணி நாளிதழில் 36வது ஆண்டாகப் பணியாற்றி வருகிறேன்.
இதுவரை எத்தனையோ திரைத்துறையினரை பேட்டி எடுத்து எழுதியிருக்கிறேன். அவர்களில் பலர் குடும்ப உறுப்பினர்கள் போல் பழகுவார்கள். அதில் ஒருவர், நடிகை டிஸ்கோ சாந்தி. 35 வருடங்களுக்கு மேலாக அவருடன் நல்ல நட்பு தொடர்கிறது. சமீபத்தில் நான் ஐதராபாத்துக்கு சென்றிருந்தபோது, அவருக்கு போன் செய்துவிட்டு, வீட்டுக்கு சென்று சந்தித்தேன். அப்போது மேலும் சில தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்களும் இருந்தனர். சில மணி நேரம் பழைய திரைப்பட சம்பவங்களை டிஸ்கோ சாந்தியுடன் பேசி, பசுமையான நினைவுகளை புதுப்பித்துக்கொண்டோம்.
#Hydrabad #DiscoShanthi

