ShareChat
click to see wallet page
#63 நாயன்மார்கள் மூன்று நாயன்மார்கள் வரலாறு பகுதி - 2 - இயற்பகை நாயனார் பெயர்: இயற்பகை நாயனார் குலம்: வணிகர் பூசை நாள்:மார்கழி உத்திரம் அவதாரத் தலம்:பல்லவனீச்சரம் முக்தித் தலம்:சாய்க்காடு வரலாறு சுருக்கம்: இயற்பகை நாயனார்.. இறைவனின் திருவருளால்.... காட்சிகள்.... இறைவனின் அன்பும்... இயற்பகை நாயனாரின் உண்மையான பற்றுதலும்... இயற்பகைநாயனாரின் மனைவியும்.... அன்பும்... காட்சிகளாக... மனதிலே உணர்ந்து ஆனந்தமாகட்டும்.. சிவானந்தமாகட்டும்... இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும்.. அற்புதங்கள் உணர்வோம்... ஆனந்தம் பெறுவோம்... “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது இயற்பகை நாயனாரை. இவர் இயற்பகையார் நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார்.பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார். அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார். சிவபெருமான் தூய திருநீறு பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார். நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார். இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார். வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன்" என கூறினார். நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து ‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’ எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி ‘பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார் இயற்பகை நாயனார். அதுகேட்ட மனனவியார் , மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ? என்று சொல்லிப் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார். திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்... மறை முனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின்றார். வேதியராகிய வந்த இறைவன், ‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார். அதுகேட்ட இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு வாளும் கேடமும் தாங்கி வந்தார். வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார். இச்செய்தியை அறிந்த மனைவியாராது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டுப்போவதா?” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர். ‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக்கூறினார் சொந்தபந்தங்கள். மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல்கூறி, போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவுறுத்தினார். அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு எதிர்த்தனர். அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார். பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார். திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார். மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார். அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’. என்றுகூறி விரைந்து வந்தார். மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின்மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார். நிலத்திலே பலமுறை தொழுதார் இயற்பகை நாயனார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார். தர்மத்தின் அளவுகோல் எது..?* தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன். மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார். வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக., திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார். பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார். மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது. இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய்., மீண்டும் ஆவலுடன்பார்த்தது. இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்... என்று நினைத்து. அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால்., பிரஜையான நாமும்., நம்மால் முடிந்ததை செய்வதுதானே முறை., என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். பசியை பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார். அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனை சந்தித்து தான் வந்த விஷயத்தைச் சொன்னார். மன்னர் போஜன் விவசாயியிடம்., "என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே., நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ., அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார் மன்னர். "தர்மம் செய்யும் அளவு பணம் என்னிடம் இருந்தால்., பணம் வேண்டி உங்களிடம் ஏன் நான் வரப் போகிறேன்..? வழியில் பசித்திருந்த நாய்க்கு உணவளித்தேன். அதற்கு ஈடாகத்தான் உங்கள் சத்திரத்தில் நான் சாப்பிட்டு விட்டேன். எனவே நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை." என்று அடக்கமாக சொன்னார் விவசாயி. "உங்கள் பசியை பொறுத்து கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே." என்று போஜன் தராசை கையில் எடுத்தார். ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும்., மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தார் மன்னர். கஜனாவில் இருந்த தங்கம் முழுதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை. வியந்த மன்னன், "உங்களை பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்..?" என்றார். "மன்னா நான் ஒரு விவசாயி. என்னைப் பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை." என்றார் பணிவுடன். அப்போது தர்ம தேவதை அங்கு தோன்றினாள். "போஜனே..! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம். கொடுத்தவரின் மனமே அதனது அளவுகோல். இவர் மனம் மிகப் பெரியது. பகட்டுக்காக தர்மம் செய்யாமல்., ஆத்மார்த்தமாக., வேண்டிய உயிருக்கு தன்னிடம் இருப்பதையெல்லாம்., அதுவும் உணவை கொடுத்து விட்டார். அதனால் நீ எவ்வளவு பொன் வைத்தாலும்., தராசு முள் அப்படியேதான் இருக்கும். ஆகவே அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ., அதை கேட்டு., கொடுத்தால் போதுமானது." என்றாள். இதை ஏற்ற மன்னன் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழி அனுப்பினார். விவசாயி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார். ஆத்மார்த்த மனதுடன் உன் தர்மத்தை/கடமையைச் செய். பலன்தானாக வரும். அதுவே உலகின் மிகச் சிறந்த தர்மமாகும்..ஃ உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து இன்புற்றனர். ஒப்புமைக் கதைகள் மனைவியைப் போலிச் சிவனடியாருக்குக் கொடுத்த கதைகள் பல உள்ளன. அவை அனைத்தும் இந்த நிகழ்வுக்குக் காலத்தால் பிற்பட்டவை...
63 நாயன்மார்கள் - ்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் காவிரிப்பூம்பட்டினம் நாடு  சோழநாடு வணிகர் ஊர குலம் இயற்பகை நாயனார் சிவனடியார்களுக்கு வேண்டும் பொருளை இல்லை வந்து  என்னாது O6rt மனைவியை வேதியர் ருவில் கொடுத்து  வாழ்ந்து  வந்தார் ` 9 ரிமைப்பொருளான மனைவியை அடியாருக்கு கொடுக்க தடுக்க  இறைவன் வேண்ட தம்  0 வீழ்த்தி  சுற்றத்தாரை வழியனுப்பிவிட்டு  திரும்புகையில்  வெட்டி அடியாரை வந்த రu என்று ஓலமிட்டு அழைக்க  நாயனாரும் இயற்பகை முனிவா ஓலம்  இறைவன் இதோ மறைந்தார் ` என்று இடபாரூடராகக் வந்தேன் திரும்பும் வேதியர் இறைவன் முன் காட்சியளித்து  சுற்றத்தினர்  நாயனார் அவரது  மற்றும் மனைவி அனைவருக்கும் வீடுபேற்றை அருளினார் ்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் காவிரிப்பூம்பட்டினம் நாடு  சோழநாடு வணிகர் ஊர குலம் இயற்பகை நாயனார் சிவனடியார்களுக்கு வேண்டும் பொருளை இல்லை வந்து  என்னாது O6rt மனைவியை வேதியர் ருவில் கொடுத்து  வாழ்ந்து  வந்தார் ` 9 ரிமைப்பொருளான மனைவியை அடியாருக்கு கொடுக்க தடுக்க  இறைவன் வேண்ட தம்  0 வீழ்த்தி  சுற்றத்தாரை வழியனுப்பிவிட்டு  திரும்புகையில்  வெட்டி அடியாரை வந்த రu என்று ஓலமிட்டு அழைக்க  நாயனாரும் இயற்பகை முனிவா ஓலம்  இறைவன் இதோ மறைந்தார் ` என்று இடபாரூடராகக் வந்தேன் திரும்பும் வேதியர் இறைவன் முன் காட்சியளித்து  சுற்றத்தினர்  நாயனார் அவரது  மற்றும் மனைவி அனைவருக்கும் வீடுபேற்றை அருளினார் - ShareChat

More like this