👉 சிரிப்பு அதுவே நம்மை நலம் காக்கும் முதல் மருந்து 👈
அன்பொழுகும் பேச்சினை யாராவது பேசி கேட்டால்
இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!!
ஆதரவு கரம் நீட்டி நானிருக்கிறேன் என்ற குரலை கேட்டால்
இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!!
மரணத்தை விட கொடிய வலியான
துரோகத்தை கண்டால்
இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!!
புறக்கணிக்கும் அவமானங்களை கண்டால் விழுந்து விழுந்து
இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!!
கண்ணீர் வராமல் வரும் வருத்தங்கள் வந்தால்
இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!!
வேறென்ன செய்ய
வலி என்பது ஒரு தடவை வந்தால் தான் வலி...!!
நிறைய இடங்களில்
நிறைய வழிகளில்
நிறைய தடவைகளில்
தொடர்ச்சியாக வந்தால்
அது வலி அல்ல
மரத்துப் போதல்
ஆதலால் சிரித்து விடுகிறேன்...!!
மரத்துப் போன நெஞ்சத்துக்கு
மரத்துப் போன உள்ளத்துக்கு
மரத்துப் போன உயிருக்கு
எதுவும் வேதனையில்லை
எல்லாமே சிரிப்பு தான்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
