ShareChat
click to see wallet page
*வளர்பிறை அஷ்டமி வழிபாட்டில் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ வழிபாட்டிற்கு அஷ்டமி மிகச் சிறந்த நாளாகும். அதுவும் நாளை வளர்பிறை அஷ்டமியாக இருக்கிறது.அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள். நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என்று ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ☘️ பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன.ஆனால் வளர்பிறை அஷ்டமி தினமான இன்று பைரவரை எந்த எந்த நேரத்திலும் வழிபடலாம்.அதுவும் கார்த்திகை மாத சுக்ர வார வளர்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். இன்றைய நாளில் பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருள் நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது. இன்று பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள பைரவர் கோயிலுக்குச் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்களைச் சொல்லி வணங்கினால் உங்களைச் சுற்றியிருக்கிற தீவினைகள் விலகும். ☘️ உங்களது நீண்ட நாள் பிரார்த்தனைகள் படிப்படியாக நிறைவேறி வருவதை உணர ஆரம்பிப்பீர்கள். இதுவரையில் பைரவரை வணங்காதவர்கள், அஷ்டமி தினங்களைக் குறித்து வைத்துக் கொண்டு பைரவர் வழிப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். தொடர்ச்சியாக ஏதேனும் மூன்று வளர்பிறை அஷ்டமியன்று மாலை நேரத்தில் பைரவருக்கு செவ்வரளிப் பூமாலை சாற்றி, செவ்வாழைப்பழங்கள் கொண்டு பூஜித்து வந்தால், துன்பங்கள் விலகி, வீட்டில் சந்தோஷம் குடிக்கொள்ள ஆரம்பிக்கும். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - நவம்பர் கார்த்திகை 12 28 வஸர்பிறை அஷ்டமி வழிபாட்டில் எண்ணற்றபலன்கள் கிபக்கும் விதிமஹே! கால காலாய ஓம் காலஹஸ்தாய் தீமஹி தன்னோ கால பைரவி பிரச்சோதயாத் நவம்பர் கார்த்திகை 12 28 வஸர்பிறை அஷ்டமி வழிபாட்டில் எண்ணற்றபலன்கள் கிபக்கும் விதிமஹே! கால காலாய ஓம் காலஹஸ்தாய் தீமஹி தன்னோ கால பைரவி பிரச்சோதயாத் - ShareChat

More like this