#📢 அக்டோபர் 14 முக்கிய தகவல்🤗 தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கற் குறிப்பு வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்.
சட்டமன்ற வளாகத்தில் பாமக எம்.எல்.ஏக்கள் போராட்டம்.
பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணியை மாற்ற வலியுறுத்தி அன்புமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் சட்டமன்ற வளாகத்துக்குள் போராட்டம்.
குழு தலைவரை மாற்ற கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் நினைவூட்டல் கடிதம் கொடுத்துள்ளனர்.
