பெண் சக்தியை துணையாகக் கொண்டு நடந்த வதத்தின், இறுதிநாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடவும் ஏற்ற நாளாகும்.
விஜயதசமி திருநாளில் குழந்தைகளை முதல் முறையாக பள்ளிகளில் சேர்ப்பவர்கள் இந்த நாளில் சேர்க்கலாம். அல்லது குழந்தைகளுக்கு முதன் முதலில் எழுத பழக்கும் போது, குழந்தைக்கு நல்ல குருவாக கிடைத்து அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றை மனதார முதலில் வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் மடியில் அமர வைத்து, ஒரு தட்டில் நெல் அல்லது அரிசி பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் குழந்தையின் தந்தையின் மடியில் அமர வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கலாம். அல்லது பள்ளியில் வித்யாரம்பம் செய்கிறார்கள் என்றால் அங்கு குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்து வைக்கலாம்.
வித்யாரம்பம் கொண்டாட நினைக்கும் பொதுமக்கள் காலையில் 7:30 முதல் 12 மணி வரை கொண்டாடலாம். காலை நேரத்தில்தான் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்க வேண்டும். பிற்பகலில் இந்த நிகழ்ச்சியை கடைப்பிடித்தால் சிறப்பானதாக இருக்காது.இந்த நிகழ்ச்சியின் போது குழந்தையின் குரு, அம்மா, அப்பா கைபிடித்து எழுதுவது மிக சிறப்பு
பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துக்கள் எழுதப்படும்). மேலும் அவரவர்களின் அபிமான தெய்வங் களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவார்கள் என்பது ஐதீகம். #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #விஜயதசமி வாழ்த்துக்கள் #சிறப்பு விஜயதசமி
