உ
சிவ கீதை
அத்தியாயம் -6
⚜⚜⚜⚜⚜⚜⚜
🙏🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏
சனாதன தர்மத்தின் முதல் குரு வியாசர் முனிவர் பாதம் பணிந்து 🙏🙏🙏
நேற்றைய பதிவில் முடிவில் சிவனார் என்னை அறிந்தவன் என் போன்றே பரப்பிரம்ம உருவை அடைகிறான் என்று சிவனார் ராமபெருமானிடம் உபதேசம் செய்வார்...
ஈசனை நாம் அடைவதற்கு நம் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் தன் பதிகத்தில்
தேவாரப் பதிகம்
""""""""""""""""""""""""""""""""
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.என்று பாடுவார்..
❤️உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம்
“நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும்....
என்று இறைவன் திருநாமமே மிகவும் சிறந்தது என்று அறிவுறுத்துகின்றார்..
அது மற்றும் இல்லாமல் மேலும் தன் பதிகத்தில்
🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥
🐦🔥போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.என்று ஈசனை நோக்கி பாடுகிறார்...
பாடலின் பொருள் என்னவென்றால்
🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥🐦🔥
🌹தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும்,
தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும்,
எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித்
தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தேயாகும்.
என்று இறைவன் திருநாமமே பக்திக்கு உயர்ந்தது என்று உங்களுக்கு ஞாபகப் படுத்திவிட்டு சிவ கீதையை தொடருகிறேன்...
🐦🔥பின் ராம் பெருமானுக்கு சிவனார் கொடுத்த நீண்ட விளக்கங்களைக் கேட்ட, ராமர், “நீங்களோ சாதாரணமான உருவோடு உள்ளீர். அப்படி இருக்க அனைத்து ஜீவராசிகளும் உங்களுக்குள் அடங்கி உள்ளன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து விளக்குங்கள்” என்று கோருகிறார்.
🐦🔥“பரந்து விரிந்த ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள் அடங்குவது போல், அனைத்து உயிர்களும் என்னுள்ளே அடங்கும். அவை என்னில் இருந்தே உண்டாகும்; என்னுள்ளே மீண்டும் அடங்கும்.” என்று சிவனார் பதில் சொன்னபோதும் ராமருக்கு ஐயம் விலகவில்லை.
🐦🔥எனவே, பரமனார் ராமருக்கு தெய்வீகப் பார்வையை அளித்து தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டுகிறார்.
🐦🔥 பரமனார் கூற்றின் படி அனைத்து உலகங்களும், தெய்வங்களும், தேவர்கள் அசுரர்கள், மானிடர், கந்தர்வர், சாரணர், நாகர், விலங்கினங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், செடிகொடிகள், காடுகள் மலைகள் அனைத்தும் அவரது விராட் ரூபத்தில் அடங்கி உள்ளதை பார்த்தார். இவ்வாறாக தெளிவடைந்த ராமர், ஈசனாரிடம், அவர் இந்தப் ப்ரபஞ்சத்தை எவ்வாறு படைத்து, காத்து அழித்து வழி நடத்துகிறார் என்பதையும், ஆத்மா எவ்வாறு பல பிறவிகள் எடுத்து இறுதியில் அவரிடம் லயம் அடைகிறது என்பதையும், முத்தி அடையும் பாதையையும் விளக்கிக் கூறும் படி வேண்டுகிறார்.
🐦🔥இதற்கு மேல் சிவனார் கொடுக்கும் விளக்கங்கள், உயிர்களின் மேல் நோக்கு பாதையை விவரிக்கின்றன.
💋அடுத்த பதிவில் அறிந்து கொள்வோம்.....
சிவ கீதை..... வளரும்.....
🌹🌹 ஐயா சிவ சிவ அரகர அரகரா 🌹🌹
☘☘ ஓம் சிவ சிவ ☘☘
🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏
🚩🕉🪷🙏🏻
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
#🙏🏼ஓம் நமசிவாய #சிவ கீதை #சிவபுராணம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉ஓம் நமசிவாய 🕉
