#🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #அம்மன் #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 *கார்த்திகை மாதம் 19ம் நாள், 05* - *டிசம்பர்-25, வெள்ளிக்கிழமை*
நம் வாழ்வில் ஞானமும் நல்வித்தையும் பெற
காத்யாயினி தேவி, கதம்பவன வாஸினி, பக்தியிலும், அன்பிலும், அறிவிலும், ஞானத்திலும் சிறந்தவர் துதிக்கும்
மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் போன்ற விளங்குகின்ற மேனி கொண்ட
நமது விழுத்துணையான திருக்கடவூர் வாழும் அபிராமி அன்னையை போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர்
எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்
எப்போதும் என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.ஓம் மாத்ரே நமஹ
எப்போதும் உன் அடியார்களோடு கூடி. என் எல்லா செயல்களையும் அவர்களை போல்
எப்போதும் தினந்தோறும் உன் மேலான ஆகம வழிமுறைகளையே நான் முறையுடன் பாராயணம் செய்கிறேன் தாயே
எனக்கு மனோ வாக் சித்தி பெற அருள்வாய் நீயே திருக்கடவூர் வாழும் அபிராமி அன்னையே போற்றி
எப்போதும் தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு .நான் மயங்காத வண்ணம் நற் கதியை அடைய அருள் புரிவாய்.தாயே
சுந்தரி, மகேஸ்வரனின் இடதுபாகம் குடிகொண்டவளே, மகிஷாசுரனின் தலை மேல் நின்று அழித்த துர்க்கையே
உன்னுடைய திருவடி மலர்கள் என்றும் என் நினைவில் நிற்க அருள் புரிவாய் திருக்கடவூர் அபிராமி அன்னையே
தேவி, உன்னை இடது பாகத்தையுடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் திருக்கோலமும், உங்கள் திருமணக்கோலமும், எனது உள்ளம் இருந்த ஆணவம் போக்கி எனை தடுத்தாட்கொண்ட திருவடிகளுமாக உருவெடுத்து வந்து,
வெம்மை மிக்க கூற்றுவன் உயிரைக் கொள்ளும்பொருட்டு என்மேல் எதிர்த்து வரும்போது என்முன் வெளிப்படையாகத் தரிசனம் தந்து நின்றருள் திருக்கடவூர் வாழும் அபிராமி அன்னையே போற்றி
ஆத்தாளே, அண்டமெல்லாம் பூத்தாளே, மாதுளம் பூ நிறத்தாளே, புவிஅடங்க காத்தாளே,
அங்குச பாசாங்குசமும் கரும்பும் கைகளில் ஏந்தியவளே, முக்கண்ணியே , உனை சதா தொழும் எங்களுக்கு
ஒரு தீங்கும் துன்பமும் வாராது தடுத்தாட்கொள்வாயே திருக்கடவூர் எங்கள் அபிராம வல்லி அன்னையே போற்றி
🪷🪷🪷 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃

