ShareChat
click to see wallet page
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் இன்று காலை அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் இரு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. புத்தக பையில் புகையிலை வைத்திருந்ததை சக மாணவன் வெளியே சொன்னதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இது ஜாதி ரீதியான மோதல் என்ற ரீதியில் சமூக வலைத்தளங்களில், சில டிவி செய்திகளில் பரவ நெல்லை மாவட்ட காவல்துறை இது குறித்த அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. ஜாதி ரீதியான மோதல் என்று வெளியிடப்படும் செய்திகள் மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்துகிறது எனவே நடந்ததை மிகப் படுத்தாமல் சமூகப் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதேசமயம் பள்ளியில் மாணவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தியதை காவல்துறை மறுக்கவில்லை. #கொடுமை
கொடுமை - உவ்க்்பிl் பள்விவளாகத்தில்பாரங்கரம் 2மாணவர்களுக்குவெட்டு உவ்க்்பிl் பள்விவளாகத்தில்பாரங்கரம் 2மாணவர்களுக்குவெட்டு - ShareChat

More like this