ShareChat
click to see wallet page
#📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை தமிழ்நாடு அரசின் SIT விசாரணையில் கரூரில் பயன்படுத்தப்பட்ட 63 ட்ரோன்கள், ArriAlexa 35 போன்ற சினிமா படப்பிடிப்பு கேமராக்கள், ஜனநாயகன் படத்தில் கதாநாயகனுக்கு கூடும் பெருங்கூட்ட காட்சிகளுக்காக விஜய்யின் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியது தெரிந்துவிடும். (விபத்து நடக்காமலிருந்தால் இதை அந்த படத்தில் சேர்த்திருப்பார்கள்) மேலும் கரூரில் நடந்தது ஒரு விபத்துதான். இதில் எந்த சதியும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டால், தன் குற்றத்தை மூடி மறைக்க தவெக செய்த பொய் பிரச்சாரம் தவிடு பொடியாகிவிடும். அதனால்தான் விஜய் SIT க்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் SIT விசாரணை மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடும். தவறு செய்தவர்கள் யார் யார் என்பது ஊர்ஜிதமாகிவிடும். ஆனால் பாஜக உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் SIT க்கு தடை வாங்கி, CBI விசாரணை வாங்கிவிட்டால்... தேர்தல் முடியும் வரை அந்த விசாரணை முடியாது, தனக்கும் எந்த களங்கமும் இருக்காது என்று நினைக்கிறார். பாஜக என்ன நினைக்கிறது? இப்போது எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கூட்டணி வைக்கலாமா என்று நடத்தும் ரகசிய பேச்சு கசிந்து விட்டதால், எங்கே கூட்டணி வைத்து நம்மை கழட்டிவிடுவார்களோ என்ற பயம் பாஜகவிற்கு வந்துவிட்டது. எடப்பாடியை மிரட்ட ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு. ஆனால் விஜய்யை மிரட்ட தற்போது எந்த ஆயுதமும் பாஜகவிடம் இல்லை. கரூர் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது என்று நினைப்பதால்தான் இந்த பதபதைப்பு. யாருக்கும் வெட்கமில்லை!
📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 - Vasa EIAIL Vasa EIAIL - ShareChat

More like this