*டிசம்பர் 05, 1952*
5 நாட்களுக்கு நீடித்து, சுமார் ஆறாயிரம் பேர்வரை பலிகொண்ட, லண்டன் பெரும் பனிப்புகை மூட்டம் ஏற்பட்ட நாள்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமோனோருக்கு மூச்சுக்குழல் தொடர்புடைய உடல்நலக்குறைவுகளும் ஏற்பட்டன.
குளிரை எதிர்கொள்ள லண்டன் மக்கள் நிறைய நிலக்கரியை எரித்தனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின், தரமான நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டதால், வீடுகளில் கனப்புக்குப் பயன்படுத்த கந்தகம் அதிகமாகக்கொண்ட, தரம் குறைந்த நிலக்கரியே பயன்படுத்தப்பட்டது.
நிலக்கரியால் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஏராளமாக இருந்ததுடன், பழங்கால வாகனம் என்று, மின்சார ட்ராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு, டீசல் பேருந்துகள் புழக்கத்துக்கு வந்ததும் மாசுபாட்டை அதிகரித்திருந்தது.
1000 டன் புகைத்துகள்கள், 140 டன் ஹைட்ரோகுளோரிக் அமிலம், 14 டன் ஃபுளோரின் சேர்மங்கள், 800 டன் கந்தக அமிலத்தை உருவாக்கவல்ல 370 டன் கந்தக டை ஆக்சைட் ஆகியவை அக்காலத்து லண்டனில் ஒவ்வொரு நாளும் வெளியானதாக வளிமண்டல ஆய்வகம் பதிவு செய்துள்ளது.
காற்றிலிருந்த எண்ணைப் பிசுக்குடன் கூடிய கரித்துகள்களால் மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் ஏற்பட்ட புகையும், பனியும் கலந்த மூட்டம், சில அடி தூரத்துக்குமேல் பார்க்க இயலாமல் செய்ததால், சமிக்ஞைகளைப் பார்க்க முடியாத நிலையில், சிறிய குண்டுகளை வெடித்து ரயில்களுக்கு சமிக்ஞைகள் செய்யப்பட்டது.
13ம் நூற்றாண்டிலிருந்தே காற்று மாசு நிறைந்த நகராக லண்டன் இருந்திருந்தாலும், இவ்வளவு மோசமான நிலையைச் சந்தித்ததில்லை. உடனடியாக '1952ன் தூய காற்றுச்சட்டம்' இயற்றப்பட்டு, மாசுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰

