#நாம் தமிழர் #🙏நமது கலாச்சாரம் #✍️தமிழ் மன்றம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏என் தேசப்பற்று
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்
வெல்க தமிழ்
தமிழன்னையே போற்றி
ஆரிய திராவிடத்தால்
தமிழர் வீழ்ந்தோம்
நம்முடைய கண்முன்
தமிழினம் அழிந்தது
நவீன உலகில்
புறநானூற்று மாவீரன்
தமிழினத் தலைவன்
பிரபாகரனை இழந்தோம்
தமிழகத்திலும் உரிமையை
இழந்து பரிதவிக்கிறோம்
தமிழ்க்குடிகள் அனைவரும்
தமிழால் இணைவோம்
ஆதித்தமிழ்க் குடிகளே
ஒன்றிணைவோம் வாருங்கள்
தமிழ்பேசுவோர் எல்லாம்
தமிழர் இல்லை
தமிழால் இணைந்து
தமிழ்மொழி காப்போம்
தமிழர் பண்பாடு
உரிமையும் மீட்போம்
ஆரியதிராவிட மாயையில்
இருந்து விழிப்போம்
ஆதிக்குடி தமிழ்க்குடி
அறத்தில் கட்டமைப்போம்
தமிழே நம்முயிர்
விழித்திடு தமிழா
ஆரியமும் திராவிடமும்
தமிழர்களுக்கு பேராபத்து
தாய்மொழி தமிழ்மொழி
தமிழர்நாவில் தவழட்டும்
கலப்பின்றி பேசும்
பழக்கம் மலரட்டும்
தொடக்கக்கல்வி முதல்
ஆராய்ச்சி படிப்புவரை
எங்கும் தமிழே
இருக்க வேண்டும்
ஆட்சிமொழியாக தமிழே
மலர்ந்திட வேண்டும்
ஆதித்தமிழனே அதிகாரம்
அறத்தமிழில் ஆளட்டும்
தமிழர்கள் நீதிநெறியை
உலகம் அறியட்டும்
தமிழன்னை அருளும்
வேண்டி வணங்குவோம்
✍️தமிழ் தாசன்
