ShareChat
click to see wallet page
வேடனின் சிலபாடல்கள் கேட்க முடிந்தது. அவருக்குள் ஊற்றெடுக்கும் துள்ளலின் படைப்புச் சக்தியையும் பார்த்தேன். ஆயிரமாயிரமாய்த் திரளும் அவரை நேசிக்கும் ஒரு தலைமுறையின் கூடுதலையும் பார்க்க முடிந்தது. அத்தனையும் மழலையும் கள்ளமின்மையும் ததும்பும் இளம் ரத்தங்கள். இந்திய வெகுஜன இசையில் வேடன் ஒரு பினமினா என்றால் இந்நிகழ்வு இசை வரலாற்றில் ஒரு பாய்ச்சல். இப்படியான கூடுதலும் மேடைகளும் வெகுஜன ஏற்பும் இதுவரை எந்த இளம் இந்திய மொழிக்கலைஞனுக்கும் உருவானது இல்லை. இன்று சினிமாப்பாடலுக்கு அப்பாலான வெகுஜன இசைக் கலகக் கலைஞன் என்றால் அவன் வேடன்தான். இந்த நிகழ்வை இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறது. ஆப்ரிக்காவிலும் இலத்தீனமெரிக்காவிலும் மேற்கிலும் அமெரிக்காவிலும் பாப் மார்லி, விக்டர் ஜாரா, ஜான் லென்னான், மைக் ஜாக்கர், துபாக் சாகுர், பாப் டிலான் போன்ற பாடகர்களின் பாடல்கள் வெகுஜனப் பாடல் எனும் கலை மரபை உருவாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், அவர்தம் துயர்கள்-மகிழ்ச்சி, யுத்த எதிர்ப்பு போன்றன இவர்களது பாடல்களின் அடிநாதம். இவர்களது பாடல்களைக் கேட்க இலட்சக்கணக்கில் வெகுமக்கள் திரளுவார்கள். இந்தியாவில் சினிமா பாடல்கள் பிரக்ஞைபூர்வமான வெகுமக்கள் பாடகர்கள் உருவாக்கத்தின் மீது ஒரு சாபம் போலப் படிந்திருக்கிறது. இந்திய மண்ணில் பாலஸ்தீனக் கொடியைப் போர்த்துக்கொண்டு பாடிய உலகளாவிய மனிதநேயம் கொண்ட இளம் குரலொன்றை இன்றுதான் வேடன் வடிவில் பார்க்க முடிந்தது. இப்படி ஒரு சர்வதேசிய நுண்ணர்வு கொண்ட வெகுஜனக் கலைஞனை ஏன் தமிழ் நிலத்தால் உருவாக்க முடியவில்லை? -தோழர் யமுனா ராஜேந்திரன் #வேடன் #📺வைரல் தகவல்🤩 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
வேடன் - ShareChat

More like this