மாசம் கட்ட வேண்டிய EMI bounce ஆகறப்ப தன்னோடு லிஸ்ட் ல இருக்கிற எல்லா நம்பரையும் எடுத்து கால் பண்ணி பத்தாயிரம் இருக்குமா அஞ்சாயிரம் இருக்குமானு மனசு வலிச்சு கேட்டு இருக்கீங்களா சார்?
ஸ்கூல்ல எல்லோரும் ஃபீஸ் கட்டியாச்சு. நான் மட்டும் தான் கட்டலைனு கவலையோட சொல்ற மகனை மனசு வலிச்சு பார்த்து இருக்கீங்களா சார்?
ஆஸ்பத்திரியில நெருக்கமானவங்களை அட்மிட் பண்ணிட்டு, சீக்கிரம் ஆப்பரேஷன் பண்ணனும் ரெண்டு நாள்ல பணம் ஏற்பாடு பண்ணுங்க னு டாக்டர் சொன்னப்பதுக்கு அப்புறம் எப்படி புரட்ட போறோம்னு அழுதுட்டே மனசு வலிச்சு வெளிய வந்துருக்கீங்களா சார்?
காலையிலிருந்து சாப்பிட காசில்லாம வெறும் ரெண்டு டீ குடிச்சிட்டு வயித்தை பெசஞ்சிட்டு பீச் பக்கம் அந்த மணல்ல உட்கார்ந்து கடலை வெறிச்சு பார்த்துட்டு இருந்துருக்கீங்களா சார்?
கிட்ட தட்ட பனிரெண்டு மணி நேரம் ஓடி ஓடி உழைச்சிட்டு முகமெல்லாம் வெளிறி வியர்வை படிஞ்சு முதுகுல அழுக்கு பிஞ்சு போன பேக் மாட்டிக்கிட்டு பஸ்லையோ டிரெயின்லையோ கம்பியை பிடிச்சு நின்னுகிட்டு வந்திருக்கீங்களா சார்?
மாசம் பொறந்து பத்து நாள்ல சம்பளம் காலியாகி இன்னும் இருபது நாள் என்ன செய்ய போறோம் னு கையை பிசைஞ்சு ராத்திரி தூக்கமில்லாம ஹால்ல பூனை மாதிரி குறுக்கே மறுக்கா நடந்து இருக்கீங்களா சார் ?
இதை எதுவும் பார்க்காதவன் தான் சார் பணம் மட்டும் எந்த நிம்மதியும் தராது, அதுக்கு மேலே எவ்வளவோ இருக்குனு சொல்லிட்டு திரிவான் சார்...
பணம் தர்ற அந்த நிம்மதியை அந்த தைரியத்தை எதுவும் தராது னு மேலே சொல்லியிருக்கிற கஷ்டபட்டவன் வலிச்சு உணர்ந்திருப்பான் சார்....
////////
யோசிச்சு பார்த்தா, கரெக்ட்னு தான் தோணுது....
#😊Positive Stories📰 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😢Sad Feelings💔 #😔தனிமை வாழ்க்கை 😓
