#விழிப்புணர்வு பதிவு💐 #தெரிந்து கொள்வோம்💐 #வித்தியாசமான தகவல்கள்💐 #இன்றைய தகவல்கள்💐. #இன்றைய தேசியச் செய்திகள்💐 அருகே அமர்ந்திருப்பவர்கள் புனேவைச் சார்ந்த யோகேஷ் சித்தடே அவரது மனைவி சுமீதா சித்தடே. இருவரையும் பாராட்டுவதற்காக பிரதமர் மோதி அவர்களை அழைத்துள்ளார். பிரதமர் தனது வீட்டிற்கு அழைத்துப் பாராட்டும் அளவிற்கு அவர்கள் என்ன செய்துள்ளனர்?*
*யோகேஷ் சித்தடே பணி நிறைவு பெற்ற பாரத விமானப் படை அதிகாரி. பனிப் பிரதேசமான சியாச்சினில் நம் ராணுவ வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவ்வப்போது மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வந்தனர்.*
*அதற்கு தீர்வு காண விரும்பிய யோகேஷ் சித்தடே தன் வசமிருந்த சேமிப்புத் தொகைகள், அத்துடன் வீட்டிலிருந்த நகைகள் அனைத்தையும் விற்றுக் கிடைத்த மொத்தத் தொகை 1.25 கோடி ரூபாயை கொண்டு உலகின் மிக உயரத்திலிருக்கும் போர் முனையான சியாச்சினில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்தார்.*
*அதனால் அங்கு நிலவி வந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மறைந்து தற்போது நமது 20,000 வீரர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைத்து வருகிறது.*
*பிரச்சனைகளைப் பற்றிப் பேசுபவர்கள் தான் அதிகம். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்கள் அரிது. அரிய செயலைச் செய்துவிட்டு அமைதியாக இருந்து வந்த யோகேஷ் சித்தடே மற்றும் அவருடைய மனைவி சுமீதா சித்தடே ஆகிய இருவரையும் நேரில் வரவழைத்து பாராட்டி மகிழ்ந்தார் நம் பிரதமர் மோடி அவர்கள்.*
