ShareChat
click to see wallet page
*ஓம் ஸ்ரீலஷ்மி* *நரஸிம்ஹாய நம* *நாளை*(11-5-25) *ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி* *சிறப்பு பதிவு*! எவ்வளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க கடவுள் ஒரு வாய்ப்பை கண்டிப்பாக அளிப்பார். ஹிரண்யனுக்கு அந்த வாய்ப்பு நரஸிம்ஹரின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது. அவன் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. ராவணனுக்கு அந்த வாய்ப்பு "இன்றுபோய் நாளைவா" வில் கிடைத்தது. அவனும் அதை கோட்டை விட்டான். துரியோதனனுக்கு கண்ணன் தூதின்போது கிடைத்தது. விஸ்வரூபமெடுத்து ஸ்ரீமந் நாராயணனாய் துரியோதனன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியையும் கொடுத்தார் பரமாத்மா. இதை "moment of truth" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த "moment of truth" வரும். அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும். காண்டீபனுக்கு போரின்போது இந்த போது குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்தார் "போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?" என்று கேட்டான் இறைவன். கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பற்றிக்கொண்டான் காண்டீபன். கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர். செஞ்சோற்றுகடனின் பேரில் அதை நிராகரித்தான் கர்ணன். கும்பகர்ணனைபோல் கர்ணனும் செஞ்சோற்றுகடனுக்காக இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்.... ஸ்ரீமத் பாகவத புராணத்தில் இது வழக்கமாக கானப்படும் நிகழ்வுதான். கடவுள் யாரையும் உடனே தண்டிப்பதில்லை. திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ அத்தனை தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறார். ஹிரண்யனை எப்போது அவர் கொன்றார். பிரஹல்லாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தார். ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் ஹிரண்யன் திருந்தவில்லை. இறுதியில் நரஸிம்ஹ அவதாரம் எடுத்து வந்து ஹிரண்யனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினார் ஸ்ரீமந் நாராயணன். அப்போதும் ஹிரண்யன் மனதில் துளி பக்தி வரவில்லை. துளியும் அவன் திருந்தவில்லை. ஹிரண்யனின் விழிகளில் ஸ்ரீமந் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான். இனிமேலும் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்த பின்னரே அவன் வயிற்றை கிழித்து கொன்றார் ஸ்ரீமந் நாராயணன். ஜெய் ஸ்ரீராம் ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து. 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி #நரசிம்மர் ஜெயந்தி #நரசிம்ம ஜெயந்தி #🙏 லட்சுமி நரசிம்மர் #🙏 ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர்🕉️💛💙
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி - MOMENT OF TRUTH MOMENT OF TRUTH - ShareChat

More like this