அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரை ஜப்பான் தாக்கியது. அமெரிக்கா ஜப்பானின் ஹிரோசிமாவில் குண்டு போட்டது. வேண்டுமானால் ஆசியாவில் அது போரை நிறுத்தியது எனச் சொல்லலாம்.
அதற்கு ஜப்பானிய அப்பாவி மக்கள் கொடுத்த உயிர்விலை எவ்வளவு?
இது இருக்கட்டும். இரண்டாம் உலகப்போர் எதற்கு எதிரானது? ஹிட்லருக்கு-பாசிசத்திற்கு முடிவுகட்டியது யார்? செஞ்சேனை.
டிரம்ப் ஹிரோசிமா குண்டுவீச்சை ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுடன் ஒப்பிட்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரை முடித்து வைத்தது போல டிரம்ப் ஈரான் போரை முடித்து வைத்திருக்கிறாராம்.
என்ன அபத்தம்!
இன்றைய போரைத் தூண்டியது யார், தாக்குதல் நடத்தியது யார்? ஈரானா இஸ்ரேலா? இந்தத் தாக்குதலால் ஒன்றும் முடிவுக்கு வரவில்லை. ஈரான் தனது நிலைபாட்டில் மேலும்
உறுதியாக இருக்கிறது.
-தோழர் யமுனா ராஜேந்திரன்
#geopolitics #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
