காமராஜ #காமராஜர் ர்
விருதுநகர்
விருதாகி
கருப்புத்
தங்கம்
பிறந்தாய்/
பெருந்தலைவர்
பேராகி
அருந்தலைவன்
ஆனாய்/
இரக்க குணம்
இதயமாகி
ஏழைத் துன்பம்
தொலைத்தாய்/
சத்து...ணவை
சாத்தியமாக்கி
சரித்திரத்தில்
நின்றாய்/
ஏ...டெடுத்துப்
படிக்காமல்
இம்மண்ணை
ஆண்டாய்/
கம்பீரம்
குருதியாக
கருணைமனம்
குறையாமல்..
கல்வித் தந்தை
ஆனாய்/
கவிழ்ந்த
மீசைக்காரனென
தொளதொள
சட்டைக்காரனெ
அழகில்கவனம்
கொள்ளவில்லை.
அணைகள்
கட்டி ஆண்டாய்/
மக்கள் மனங்கள்
தாங்கிட வாழ்ந்தாய்/
அங்கமெல்லாம்
அரசியல்
தங்கிட...
ஆளுமையில்
நீ சிறந்திட/
எங்கள்
கிங்மேக்கர்
ஆனாய்/
எளிமைத்
தலைவனே
ஏழ்மை
உணர்ந்தவனே/
உணவை
கொடுத்தவனே/
கல்வி உற்சாகம்
அளித்தவனே/
உயர்ந்த
மனிதனே/
நேர்மை நேசனே/
தாய்மண்
பாசனே/
கரங்கள் கூப்பி
வணங்குகிறோம்.
எங்கள்
கர்ம வீரன்
உன்னை/
மறவாதிருப்போம்.
உன்புகழ்
நிறைந்த மண்ணை... ///
கவிதை மழை
அ. நவஜோதி✍️
