#பத்திஸ்டேட்ஸ் #ராம் சரண் #ஸ்ரீ அனுமார் ஜெய் ஸ்ரீ ராம் அதிசயப் பயணம்!*
ஹரிஓம் வாழ்க மஹாதேவ் ஈசன் அருள் அன்பே சிவம்
*5113 நாட்கள் என்ன செய்தார்? எங்கே போனார்? - 1*
ஒரு அருமையான ராமாயண ஆராய்ச்சிப் புத்தகம், லண்டன் பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்தது. ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார்.
அதாவது, 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள்.
இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா .
ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ‘எமர்ஜென்ஸி’ பயணத்தில் ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே.
மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா - ‘’பாரதீய வரலாறு - ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:
கைகேயி உத்தரவு போட்ட பின்னர் என்ன நடந்தது?
*1. அயோத்தி*
பிறந்த ஊரில் ராம ஜன்ம பூமியில், எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார். ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம். ஸீதையோ பிடிவாதம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை. ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், போகும் இடம் வெகுதூரம்! புறப்படு என்றான்.
*2. முதல் ஸ்டாப் (முதல் மண்டகப்படி) - தமஸா நதி*
முதல் நாள் இரவு தமஸா நதிக்கரையில் தங்கினார். ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது. அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ சாந்தகுண ஸ்வரூபன், கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன்.
*3. அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா*
அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவுசெய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும், என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.
*4. சூர்ய குண்டம்*
ராமன், லக்ஷ்மணன், சீதா ஆகிய மூவரும் சூர்ய குண்டத்தில் குளித்தனர். சூர்ய பகவானை வணங்கினர்.
இப்பொழுது பைஸாபத் (அயோத்தி) மாவட்டத்திலிருந்து உத்தர பிரதேஸத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நுழைந்தனர்.
*5- வது மண்டகப்படி - வேதஸ்ருதி நதி*
தற்போதைய அஷோக் நகர் அருகில் நதியைக் கடந்தனர்.
*6. கோமதி நதி*
அடுத்ததாக வழியில் தடை போட்ட நதி கோமதி. அதைத் தற்போதைய வால்மீகி ஆஸ்ரமம் அருகே கடந்து எதிர்க் கரை அடைந்தனர்.
*7. பிரதாப்கார் மாவட்டத்தில் நுழைகின்றனர் - ஸ்யந்திகா (சாய் ஆறு)*
ஸாய் நதியும் பராரியா ஆறும் கலக்கும் இடத்தில் நின்று இயற்கையை ரஸிக்கின்றனர்.
*8. அடுத்ததாக வேத்ரவதி நதியை அடைகின்றனர்*
தற்போது இந்த நதிக்கு சாகர்னி என்று பெயர்.
*9. பாலுக்னி நதி*
நிறைய மணலும் கூழாங்கற்களும் நிறைந்ததால் இந்த நதியை பாலுக்னி என்று அழைப்பராம்.
இதைத் தாண்டியவுடன் ராமன் உத்தரப் பிரதேஸத்தின் பிரயாகை மாவட்டத்துக்குள் (இப்போதைய பெயர் அலஹாபாத்) பிரவேஸிக்கிறான்.
*10. சிருங்கிபேர புரம்*
'குகனுடன் ஐவரானோம்’ என்ற கம்பன் பாடல் மூலம் பிரஸித்தி பெற்ற குகன் என்னும் வேடனைக் காண்கிறான் ராமன். ஸஹோதரனைப் போல அவன் பாஸமும் பரிவும் நேஸமும் நட்பும் பாராட்டுகிறான். அவன் நிஷாத குல மன்னன். கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகளை அணி வகுக்கிறான்.
*11. ஸீதா குண்டம்*
கங்கையைக் கடந்தவுடன், அமைச்சன் ஸுமந்திரனைத் திருப்பி அனுப்புகிறான் ராமன்.
*12. சிவன் கோவில்*
ஸீதா தேவி, ஒரு குளத்திலிருந்து மண் எடுத்து சிவ லிங்கம் செய்து வழிபடுகிறாள். (இதை எழுதியவர் வால்மீகீ ராமாயணத்தோடு ஆங்காங்கே உள்ள ஸ்தல புராணக் கதைகளையும் இணைத்துப் படைத்துள்ளார் என்பதை நினைவிற் கொள்க.)
*13. ராம ஜோய்தா*
சரவா கிராமம் அருகில் ராமர் குளித்தார்.
*14. பரத்வாஜ மஹரிஷியுடன் சந்திப்பு*
ராமன் முதலில் சந்தித்த பெரிய ரிஷி பரத்வாஜர். அவரது ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு. அது கங்கை நதிக் கரையில் அமைந்தது.
*15. ஆலமர வழிபாடு (யமுனை நதிக்கரை)*
ஸீதா தேவி அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தை வழிபடுகிறாள்.
*16. பதினாறாவது மண்டகப்படி - சங்கம்*
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் மிகப் பெரிய கும்பமேளா திருவிழா நடக்கும் த்ரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை, ஸரஸ்வதி நதிகள் கலக்குமிடத்தில் புண்ய ஸ்நானம்.
*17. ஸீதா ரஸோய் (ஜஸ்ரா பஜார்)*
இங்கு மிகப் பழைய குகை ஒன்று இருக்கிறது. அங்கு ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஸீதா சமைத்து அறுசுவை உண்டி படைத்தாள்.
பாண்டா மாவட்டத்தில் நுழைகின்றனர். சிவ் மந்திர்/சிவன் கோவில் (ரிஷ்யான் ஜங்கல்) கானகம் வாழ், ரிஷிகளின் கூட்டத்துடன் ராமன் சந்திப்பு. ஸீதா ரஸோய் (ஜன் வன்) ஸீதா தேவி இங்கு அரிசிச் சோறு உண்டாக்கினாள்.
ராம பிரான் 14 ஆண்டுகள் அயோத்திக்கு வெளியே இருந்தார். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து கால் நடையாக இலங்கை வரை வந்தார். புராண கால மனிதர்களில் அதிக தூரம் நடந்து, சாதனைப் புஸ்தகத்தில் முதலிடம் பெற்றார். அவரைப் போல கால் நடையாக நடந்த மனிதர் எவரையும் நாம் அறியோம் . சுமார் 5113 நாட்கள் நாட்டை வலம் வந்தார். அவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிசங்கரர் இப்படிப் பலமுறை வலம் வந்தார்.
ஆத்ம நமஸ்கார்
ஷிரி சூர்தர் மகாதேவ்

