#TNPSC-group4
*🔴 குரூப் 4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., முக்கிய அறிவிப்பு*
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தேர்வாணையத்தால் 09.06.2024 முற்பகல் அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- IV க்கான (தொகுதி- IV பணிகள்) (அறிவிக்கை எண் 01/2024) OMR விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள். தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக OMR விடைத்தாளினை பதிவிறக்கம் (பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள காலம் 21.07.2025 முதல் 20.07.2026 வரை) செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
*💥 குரூப் 4 தேர்வை ரத்து செய்க - இபிஎஸ்*
ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை ரத்து செய்து, உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும். தேர்வு குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - இபிஎஸ்
தேர்வில் பல கேள்விகள், பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு இருந்தது உள்ளிட்டப் புகார்கள் வெளிவரும் நிலையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
*💥 குளறுபடி எதுவும் இல்லை!*
குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி எதுவும் இல்லை; தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும்
- தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்