#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️மரங்கள்
மகிழ்ந்திருக்க!
கிளிகள்
பறந்திருக்க!
பூமித்தாய்
மகிழ்ந்திருக்க!
பூக்களெல்லாம்
சிரித்திருக்க!
ஓடையது ஆடித்திளைக்க/
அதில் ஓடும் நீர்
சளசளக்க/
அருவிச்சத்தம்
குருவிச் சத்தம்
குயிலின் சத்தம்
காற்றின் சத்தம்
காதில் நுழைய
கானத்தின்
காலைக் குழந்தை
பிறந்தது...
அது கவலையின்றி
தவழுது
இந்தநாள்
இனிய நாளாக!
அ.நவஜோதி-✍️
