ShareChat
click to see wallet page
தரையில் நிற்கும் தாழம்பூவாய்.. மகனே... நீ! உனைத் தூக்கி முத்தமிடத் துடிக்கும் கைகளில் நான்! என் தோள் தொட்டில் வழியாக நீத்... துயில் கொள்ளவேண்டும். உன்னைத் தூக்கிச் சுமக்கும் தாயாக நான் மாறவேண்டும்... பத்து திங்கள்.. என் மனக்கருவரையில் நான் சுமந்த மகன்... நீயே! என் மகிழ்ச்சித் தூரலின் உச்சமூம்... நீயே! உன் பிஞ்சுக் கைவிரல்ப் பிடித்ததில் பித்தனாகிக் கிடக்கும்.. தகப்பன் நான்! தயவுசெய்து தரையில் நிற்காதே... தங்கம் நிற்பது போல்.. இருக்கிறது. உடல் சுமந்த தாயாய் உன் அன்னை! உனை உயிரில் சுமக்கும் தந்தையாய்.. நான்! உன்னை தூக்கிக்கொண்டு தூங்க வைக்கும் வரமெனக்குப் போதும்... வா மகனே... ! கவிதை மழை அ. நவஜோதி- #தந்தையர் ✍️
தந்தையர் - ShareChat

More like this