*" சோதனைகள்!!❤🩹*
முஃமின்களுக்கு ஏற்படும் சோதனைகள் தண்டனை அல்ல அது ஆலமீன் நிஃமத் அருட்கொடை அதை அவன் நாடியவர்களுக்கு அதிகமதிகம் வழங்கி அவர்களின் ரப்புல் ஆலமீனின் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்வான் அந்த சோதனைகள் மூலம் அவன் அவர்களோடு உரையாடுவான் ஸுப்ஹானல்லாஹ்❤🩹🪄✨!!
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5645.
அறிஞர் ஃபுதைல் பின் இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் :
அல்லாஹ் ஒருவரின் மீது நேசம் பாராட்டினால் அவருக்கு அதிக சோகத்தை தருவான்.
ஆனால், ஒருவரை வெறுத்தால் அவருக்கு உலக வாழ்க்கையை விசாலம் ஆக்கிவிடுவான்.
*நூல் : ஸியரு அஃலாமின் நுபலா 338/4*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3
இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி : 5643.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5641 5642.
#Miracle #HalalPost #islam #Islamic Way Of Life Official #islamicposts
