செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் காரில் கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான 8 பேரும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
#பறிமுதல் #கைது #கடத்தல்

