எந்தன் உலகத்தில் புதிதாய் புகுகின்ற எவரையும் புறக்கணிக்க வசதியில்லா ஏழை நான்... எந்தன் தனித்துவம் கேள்வியாகும் எனத் தெரிந்தும் தனிமையின் பயம் கருதி தன்மையாக நடக்கின்றேன்... யாருமில்லா வாழ்வில் அலங்கரிக்கப்பட்டப் புன்னகையின் அடையாளம் கண்டு அருவருக்கும் அகத்தை ஆணையிட்டு அடைத்தேன்.. பகட்டுப் பேச்சுகளை... பரிதாபப் பார்வைகளை... சம்பிரதாய ஆறுதலை... சமயோசித கண்ணீரை... பரிகாசம் செய்யாமல் பக்குவமாய் கையாளுகிறேன்... எனினும், ரௌத்திரங்கள் வெளிப்படும் தருணங்களில் மட்டும் தயங்காமல் என்னை நிர்ப்பந்திக்கும் தனிமையிடத்தே தஞ்சம் புகுகின்றேன்!!!
தனிமை - 自 - ShareChat
189 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post