பட்டையை கிளப்பும் பால் வியாபாரம்...!! பட்டையை கிளப்பும் பால் வியாபாரம் !! கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக என்று ஒரு பழமொழி உள்ளது. கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி வேலைக்கு செல்லும் அனைவருக்கும் இது பொருந்தும். 🌟 கிராமத்தில் மாடுகள் இல்லாத வீடு இருக்காது. அவற்றை சரியாக மாத்தி யோசித்தால் நீங்கள் தான் கெட்டிக்காரர். அதாவது மாடுகள் மூலம் எளிதாக கிடைக்கும் பாலை வைத்து வியாபாரம் செய்யலாம். மாத்தி யோசி.....! 🌟 வீட்டிற்கு பால் ஊற்றுவதற்கு பதிலாக பாலை மொத்தமாக கொள்முதல் செய்து பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். 🌟 ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் என இலக்கு வைத்து விற்பனை செய்யுங்கள். கண்டிப்பாக லிட்டருக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். மூலதனம் வேண்டுமே...? 🌟 இதற்கு மனிதர்கள் தான் மூலதனமே.. முதலில் பாலை விற்பனை செய்யும் ஆட்களை கண்டுபிடித்து அவர்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும். 🌟 அவர்கள் வேறு ஒருவரிடம் பால் விற்று கொண்டிருப்பார்கள். உங்களின் திறமையால் அவர்களுக்கு உங்களின் மீது நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இதுவே பால் கொள்முதலுக்கு பக்காவான ஏற்பாடாக மாறிவிடும். எப்படி விற்பனை செய்வது? 🌟 பால் கொள்முதலுக்கு ஆட்கள் ரெடி.. ஆனால் அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 🌟 பாலைக் கொள்முதல் செய்து அப்படியே வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, பால் சப்ளை செய்பவர்கள் அளவை வித்தியாசப்படுத்துவது, பாலில் தண்ணீர் சேர்ப்பது போன்ற தவறுகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், பாக்கெட்டில் அடைத்து சப்ளை செய்தால் இந்தப் பிரச்சனை இருக்காது. வேறு என்ன தேவைப்படும்..? 🌟 தொழிலைக் கொஞ்சம் பெரிய அளவில் செய்யும் பொழுது அதற்கான முதலீடும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஏற்ற இடம், இயந்திரங்கள், வாகனங்கள் என்று சில அடிப்படையான தேவைகளைச் செய்ய வேண்டும். முதலீட்டுக்கு என்ன செய்வது? 🌟 இதற்கான முழுத் தொகையையும் தயார் செய்ய தேவையில்லை. இந்தத் தொழிலைத் தொடங்கும் முன் மாவட்ட தொழில் மையத்தில் பதிவுசெய்து உரிமம் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள், கடன் வாங்குவதற்கான வழிமுறைகள், அறிக்கை தயார் செய்தல் போன்றவற்றில் உதவி செய்வார்கள். 🌟 வங்கிகள் திட்ட அறிக்கையின் அடிப்படையில் கடன் அளிக்கின்றன. கடனை சுமார் 10 - 15 ஆண்டுகள் வரை கட்ட அனுமதிக்கிறார்கள். பதப்படுத்தி விற்பனை செய்தல் : 🌟 கறந்த பாலை அலுமினியம் கேன்களில் நிரப்பி மூன்று மணிநேரத்துக்குள் தொழிற்சாலைக்குக் கொண்டு வரவேண்டும். 🌟 அதை முதலில் குளிரூட்டவேண்டும். அடுத்து கருவிகளின் உதவியோடு பாலைச் சமச்சீர்படுத்தி, நிலைப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும். இதிலும் பிரச்சனைகள்.. 🌟 சிக்கல் இல்லாத தொழில் எதுவும் இல்லை. இந்தத் தொழிலில் 24 மணி நேரமும் இயங்கவேண்டி இருக்கும். 🌟 இரவு நேரத்தில்தான் பேக்கிங், டீலர் சப்ளை போன்ற பணிகள் இருக்கும். அதனால், கண்விழித்து வேலை செய்யும் ஆட்களை அமர்த்தவேண்டும். பாக்கெட் பால் மட்டுமல்ல... 🌟 பாலை வைத்து பாக்கெட் பால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதல்ல. பால் மூலம் நெய், தயிர் போன்றவற்றையும், கோடைகாலத்தில் மோர் கூட விற்பனை செய்யலாம். 🌟 இப்படி கையிலேயே வேலையை வைத்துக்கொண்டு வேறு வேலைக்கு நாம் ஏன் அலைய வேண்டும்...
245 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post