ஸ்ரீநடராஜர் நடனம்9
===============
ஆருத்ரா பதிவு=9
===============
प्रचण्डताण्डवाटोपे प्रक्षिप्ता येन दिग्गजाः ।
भवन्तु विघ्नभङ्गाय भवस्य चरणाम्भुजाः ।।
" 1.1.ப்ரசண்டதாண்டவாடோபே ப்ரக்ஷிப்தா யேன திக்கஜா: |
பவந்து விக்னபங்காய பவஸ்ய சரணாம்புஜா: || "
- ஸ்ரீ மத்ஸ்யமஹாபுராணம், மங்களஸ்லோகம்.
1.1.எவருடைய தாண்டவ நடனத்தின் வேகத்தால் திக்கஜங்கள் வீசியெறியப் படுமோ,அந்த சிவபெருமானின் தாமரை மலர் போன்ற பாதங்கள் அனைத்து விக்னங்களையும் நீக்கியருளட்டும்.
பரமேஸ்வரர் ஸ்ரீநடராஜ மூர்த்தியாக தனியாக ஆடிய நடனம் -48,
ஸ்ரீஉமாதேவியுடன் சேர்ந்து ஆடியது- 36,மஹாவிஷ்ணு பகவானுடன் 9. முருகப்பெருமானுடன் ஆடியது-3,தேவர்களுக்காக- 12 என 108 நடனங்களை ஆடியுள்ளார்
ஸ்ரீசபாநாயகர் துதி
=========================
உலகினும் உயிரினும் ஒன்றி நின்றருள்
குலவிய ஒளியுயிர் குறிக்க ஐந்தொழில்
இலகிய மன்றினுள் எழில்நடஞ் செய்வோன்
வலமிகு மலரடி வழுத்து வாமரோ
தில்லைத் திருமன்றுள் நடனமாடுகிற ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் உலகோடும் உயிர்களோடும் ஒன்றி நின்று அருள் செய்பவன்; உயிர்கள் விளக்கம் பெற ஐந்தொழிலைச் செய்து அருள் வழங்குபவன்; அவனது திருவடியை வணங்குவாம்.
பஞ்ச சபைகள்:
=====================
ரத்தின சபை – திருவாலங்காடு
கனகசபை – சிதம்பரம்
ரஜிதசபை – (வெள்ளி சபை) – மதுரை
தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்
ஆனந்த தாண்டவம் – சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் – திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் – மதுரை
ஊர்த்துவ தாண்டவம் – அவிநாசி
பிரம்ம தாண்டவம் – திருமுருகன்பூண்டி
காட்டிடை ஆடும் கடவுள்
==============================
திருவாலங்காடு – ஆலங்காடு
திருவெண்பாக்கம் – இலந்தைக்காடு
திருவெவ்வூர் – ஈக்காடு
திருப்பாரூர் – மூங்கிற்காடு
திருவிற்கோலம் – தர்ப்பைக்காடு
ஆனந்தத் தாண்டவம்
==========================
படைத்தல் – காளிகாதாண்டவம் – திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல் – கவுரிதாண்டவம் – திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல் – சங்கார தாண்டவம் – நள்ளிரவில்.
மறைத்தல் – திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல் – ஊர்த்துவ தாண்டவம் – திருவாலங்காடு, ரத்தினசபை.
ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.
தில்லையில் ஐந்து சபைகள்
===============================
1. சித்சபை – சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.
2. கனகசபை – சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.
3. தேவசபை – பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
4. நிருத்த சபை – தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.
5. ராஜசபை – ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.
நவதாண்டவம்
====================
இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்
திருவாரூர்
=================
திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர்.
திருக்குவளை
====================
திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர்.
திருநள்ளாறு
============
திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர்.
நாகப்பட்டினம்
==============
நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர்.
வேதாரண்யம்
====================
திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர்.
திருவாய்மூர்
================
திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர்.
திருக்காறாயில்
======================
திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம்.
திருவாலங்காடு
=================
திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.
திருச்செங்காட்டங்குடி
======================
தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏ஆன்மீகம் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு


