குவைத்திலிருந்து நாடுகடத்தபட்ட நபர்கள் அமீரகத்திலும் நுழைய முடியாத தகவல் பரிமாற்ற திட்டம் நடைமுறையில் வந்துள்ளது:
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டினர் பற்றிய தகவல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்துறை அமைச்சகத்திற்கு கைமாறும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, டேட்ரா வயர்லெஸ் தகவல் தொடர்பு திட்டம் மற்றும் மின்னணு கைரேகை பதிவு ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றமும் நிறைவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(09/11/25) மாலையில் அறிவித்துள்ளது.
இரு நாடுகளின் உள்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு இணைப்புத் திட்டங்களைப் பின்தொடர்வதற்காக இன்று நடைபெற்ற எட்டாவது கூட்டத்தில் பங்கேற்ற குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில்நுட்பக் குழுக்களின் உறுப்பினர்களை போக்குவரத்து மற்றும் செயல்பாட்டுத் துறைத்தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல்-அதிகி சந்தித்தார். புதிய அமைப்பு நிறைவடைந்த நிலையில், குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நுழைவுத் தடைகளை எதிர்கொள்வார்கள்.
மேலும் ஒருங்கிணைந்த வளைகுடா விசா நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதிலிருந்து நிலைமை இதைவிட மோசமாக மாறும், காலு வச்ச இடம் எல்லாம் கன்னிவெடி என்கிற மாதிரி ஒரு வளைகுடா நாட்டில் பயணத்தடை கிடைக்கும் எந்தவொரு வெளிநாட்டினரும் மற்ற எந்த வளைகுடா நாட்டிலும் வேலைக்காக செல்ல முடியாத நிலை ஏற்படும். #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️


