ShareChat
click to see wallet page
search
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 24/01/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 264 vi)1) ii) தேவனாகிய கர்த்தர் தூதர்களை ஏன் சிருஷ்டித்தார்? அவர்கள் யாவர்? (Part - 4) 2. தேவனுக்கு முன்பாக இருந்து ஆராதிக்கும்படி சிருஷ்டிக்கப் பட்ட கேருபீன்கள்: (part-3) "தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது." (ஆதி 3:1) "சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது." (I கொரி 11:3) "ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.'' (தீமோ 2:14) "எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்ளாகி." (ரோமர் 3:23) "எல்லாரும் வழி, தப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை." (ரோம 3:12) "உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்த சேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடகூட உயிர்ப்பித்து. அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து ; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து: துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்துகொண்டு வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்." (கொலோ 2:13-15) ''சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்." (ரோமர் 16:20) "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள்." (வெளி 12:11) "ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." (வெளி 21:7) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே. மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், கீழ்க்காணும்படி நமக்குப் போதிக்கிறதாய் இருக்கிறது. பூமியிலே தள்ளப்பட்ட பிசாசானவன், சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளவனாய் ஏதேன் தோட்டத்தில் புகுந்து ஏவாளையும், ஆதாமையும் வஞ்சித்து தேவ மகிமையையும், மரணமில்லாத நித்திய வாழ்வையும் இழக்க வைத்தான் என்று அறிய முடிகிறது. அப்.பவுலடியார் மூலம், "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானோம்." (ரோமர் 8:37) என்கிறார் பரிசுத்த ஆவியாகிய தேவன். ஆனால் அன்பின் பிதாவாகிய தேவன் சாத்தானால் உண்டாக்கப்பட்ட சகல பாவங்களையும் அன்பின் குமாரனாகிய இயேசுவைக் கொண்டு. “சிலுவையின் ஆணியடித்து, துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின் மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார்.'' (கொலோ 2:13-15) என்று பார்க்கிறோம். அன்பின் பிதாவாகிய தேவன், தன் அன்பின் குமாரனாகிய இயேசுவின் மூலம் சிலுவையில் அடைந்த வெற்றியை “பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்து கொள்ளப்ப பரதேசிகளான ( 1பேது 1:2) இரட்சிக்கப்பட்ட தேவ ஜனங்களுக்கு இலவசமாகவும் கிருபையாகவும் தந்தருளியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( கொரி 15:57) “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூறுகிற வராலே முற்றும் ஜெயங்கெள்ளுகிறவர்களாயிருக்கிறோம்." (ரோம 8:37) “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்." (ரோம 16:20) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம் அதை உறுதிப்படுத்துகிறதாய் இருக்கிறது. இவ்வாக்குத்தத்தங்களுக்குரிய சுதந்திரவாளிகளானவர்கள் சாத்தானை ஜெயிப்பார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள்." (வெளி 12:11) என்று இவ்வசனமும் அறிவிக்கிறது. பொல்லாங்கனாகிய சாத்தானை ஜெயித்தவர்களை, “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." (வெளி 21:7) என்ற இக்கர்த்தருடைய திருவசனத்தின்படி, தன் குமாரர்களாக ஏற்றுக் கொண்டு சீயோனை சார்ந்த எல்லாவற்றுக்கும் சுதந்திரவாளியாக்குகிறார் என்பதை நமக்கு அறிவிக்கிறதாய் இருக்கிறது. கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. Ttt #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ன்றைய வெளிப்படுத்தின விசேஷ 24/01/2026 தியானம் VI / ) ii) தேவனாகிய கர்த்தர் தூதர்களை ஏன் சிருஷ்டித்தார் ? அவர்கள் யாவர்? (Part -4 ) தேவனுக்கு முன்பாக இருந்து ஆராதிக்குபேடி சேருஷ்டிக்கப் 25 கேருபீன்கள்3 (part- 3) ULL பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சைை ன்றைய வெளிப்படுத்தின விசேஷ 24/01/2026 தியானம் VI / ) ii) தேவனாகிய கர்த்தர் தூதர்களை ஏன் சிருஷ்டித்தார் ? அவர்கள் யாவர்? (Part -4 ) தேவனுக்கு முன்பாக இருந்து ஆராதிக்குபேடி சேருஷ்டிக்கப் 25 கேருபீன்கள்3 (part- 3) ULL பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சைை - ShareChat