❤️ரமணாஷ்ரமத்திற்கு திருமதி.எலியனார் பாலின் நோயீ வந்தார்.
❤️ரமணாஷ்ரமத்திற்கு வந்தபோது சர்வாதிகாரி நிரஞ்ஜானந்த ஸ்வாமி அவரை வரவேற்று,நேராக பகவானிடம் அழைத்துச் சென்றார்.
❤️அந்த அனுபவத்தை பற்றி நோயீ பகவானுடைய தூய்மையும்,அருளும் அந்த சூழலில் நிரம்பி இருந்ததை நான் உணர்ந்தேன்.
❤️அந்த ஞானியின் ஸந்நிதியில், தெய்வீகத்தை ஒருவரால் உணர முடியும்.
❤️அவர் புன்னகை செய்தப் பொழுது இறைவனது சாம்ராஜ்யத்தின் தெய்வீக கதவுகள் திறக்கப்பட்டது, போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
❤️அவருடையதைப் போன்ற தெய்வீக ஒளி பொருந்திய கண்களை நான் அதுவரை கண்டதில்லை.
❤️பகவான் என்னை அன்புடன் வரவேற்று,என்னைப் பற்றி விசாரித்தப் போது என் மனச்சுமை வெகுவாக இறங்கியதோடு,
அன்பும்,கருணையும் ததும்பும் பார்வையினால் அவர் வெளிப்படுத்திய ஆசிகள் நேராக என் இதயத்தைத் தொட்டன.
❤️எனக்கு அவர் எத்துணை தேவை என்பதே அவர் உணர்ந்திருந்தார்.
❤️நான் உடனே பகவானிடம் ஈர்க்கப்பட்டேன்.
❤️அவரது பெருமையும்,தயையும் அனைவரையும் தழுவி அணைத்தது.
❤️அவரது அமைதியான அன்பு,அறிவு இவற்றின் பாதிப்பு,வார்த்தைகளை விட அதிக சக்தி வாய்ந்தவையாக இருந்தன.
❤️அவரிடம் வருபவர்கள் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே.
❤️அவரது உள்ளத்தில் ஒளி வீசிய
பேரமைதியை எல்லோராலும் உணர முடிந்தது என்று கூறினார்.
❤️அந்த நொடியில் இருந்து ஓராண்டுக்கு பின் பகவானிடம் விடை பெற செல்லும் வரை,நோயீன் விழிகள் கண்ணீரை பெருக்கியவாறு இருந்தன.
❤️பகவான் அவர் மீது செலுத்திய கவனம் இடைவெளி இன்றி தொடர்ந்து இருந்தது.
❤️நோயீ பகவானுடைய ஸந்நிதிக்கு வந்த கணத்திலேயே பகவானது கவனம் நோயீடம் திரும்பி விடும்.
❤️பகவானுடைய வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த இந்த அற்புதமான உறவு நம்பகத்தக்கதாக இல்லை,ஆனால் அது உண்மை.
❤️ஒரு பெண்ணின் எளிமையும், உள்ளத்தையும் உருக்கும் கண்ணீரும் மூத்த பக்தர்களையும் அவரிடம் அன்பு கொள்ளச் செய்தது.
❤️ஆரம்பத்தில்,அவர் பெருக்கிய கண்ணீருக்கு காரணம் கவலை, துன்பம்,வேதனை இவைகளாக இருந்தன.
❤️ஆனால் அவர் பின்னர் பெருக்கிய கண்ணீரோ அவரது விவரிக்க இயலாத ஆனந்தம்,ஆன்மீக நிறைவு இவற்றின் இயல்பான வெளிப்பாடாக இருந்தது.
❤️பகவானை பார்த்த பிறகுதான் பல ஆண்டுகளாக உறங்காத அவர், ஆழ்ந்து உறங்கினார்.
❤️அப்போதிருந்து,தான் வழக்கமாக உட்கொண்டிருந்த தூக்க மாத்திரைகளை நிரந்தரமாக நிறுத்திவிட்டார்.
❤️பகவானின் நேரடியான ஆசிகளே அதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
❤️அவரால் எப்படி அதை சமாளிக்க முடிந்தது என்று கேட்ட பொழுது மருந்துக்கெல்லாம் மருந்தான, எப்போதும் கைவிடாத,பகவானுடைய அருளைப் பெற்றது தான் இதற்கு காரணம் என்று அவர் கூறியது, பகவான் தனது பாடலில் அருணாசலத்தை மருந்துக்கெல்லாம் மருந்து என பாடி இருப்பதை எதிரொளிப்பதாக உள்ளது. 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்


