விமான விபத்தில் பாடகர் உயிரிழப்பு
கொலம்பியவை சேர்ந்த 34 வயதான யீசன் ஜிமெனெஸ் (Yeison Jimenez) அந்த நாட்டின் பிரபல பாடகர் ஆவார்.
இன்று இரவு கொலம்பியாவின் மரினிலாவில் அவருடைய நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
போயாகாவில் நிகழ்ச்சியை முடித்து அவர், மெடலினுக்குச் சென்று அங்கிருந்து மரினிலா நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக தனியார் விமானம் ஒன்றில் தனது இசைக்குழுவினர் 3 பேருடன் மெடலினுக்கு புறப்பட்ட போது ஜுவான் ஜோஸ் ரோண்டன் விமான நிலையத்திற்கு அருகில், பிற்பகல் 3 மணியளவில் விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பி உயரே பறக்க முயற்சித்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் இருந்த 2 விமானிகள்மற்றும் பாடகர் யீசன் ஜிமெனெஸ் உட்பட 6 உயிரிழந்துள்ளதை கொலம்பியா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✈️ விமான விபத்தில் பிரபல பாடகர் உட்பட பலர் பலி #breaking news #📝இன்றைய செய்தி📡


