#ஷாஜகான்
#பிறந்ததினம்
#ஜனவரி_5
ஜனவரி 5, வரலாற்றில் இன்று. முகலாய மன்னர்
ஷாஜகான் பிறந்த தினம் இன்று.
இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஷஹமணி புதீன் முகம்மது ஷாஜகான்.
இவர் 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை ஜஹாங்கிர் இறந்ததை தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது..
ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச் சின்னங்களில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. . இது அவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. . ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. புகழ்வாய்ந்த மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது, இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. ஷாஜகானாபாத்தின் உருவாக்கியவர் அவரே, அது இப்போது 'பழைய தில்லி' என்று அழைக்கப்படுகிறது.
ஜனவரி 5 உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை நிறுவிய முகலாய மன்னர் மன் ஷாஜகான் ன் பிறந்த தினம்". #life #lifes


