ShareChat
click to see wallet page
search
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪️➕புனித அந்தோனியார் பாடல்கள்🎶 🌷✨🌷✨🌷✨🌷✨🌷 *குழந்தை இயேசுவுக்கு ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை* 🌷✨🌷✨🌷✨🌷✨🌷 *🌻குழந்தை இயேசு செபம்🌻* ⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️ அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த *(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)* வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம். எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக - *ஆமென்🙏🏻* *குழந்தை இயேசு பாலனிடம் மன்றாட்டு* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 (உன் பாவங்களுக்காக துக்கிப்பதாக இயேசுவிடம் சொல்) *🙏🏻வல்லமையுள்ள செபம்:🙏🏻* இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்;கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, 'தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்' என்று நீர் மரண அவஸ்;தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன். சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக. *-🙏🏻 ஆமென்.🙏🏻* *அற்புத குழந்தை இயேசுவுக்குப் புகழ்மாலை* ❣️🌻❣️🌻❣️🌻❣️🌻 ஆண்டவரே இரக்கமாயிரும்-2 கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2 ஆண்டவரே இரக்கமாயிரும்-2 கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்-2 கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும்-2 வானகத் தந்தையாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகை மீட்ட, மகனாகிய இறைவா தூய ஆவியாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் அற்புதக் குழந்தையாகிய இயேசுவே *(பதில் -எங்கள் மேல் இரக்கமாயிரும்.)* வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே... எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே.... எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே... வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே... உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே... எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே... உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே... எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே... தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே... உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே... நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே.... எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே... உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே... ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே... எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே... பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே... உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே... கருணை கூர்ந்து. . . *எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே.* கருணை கூர்ந்து. . . *எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.* எல்லாத் தீமையிலிருந்து . . . *எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.* எல்லாப் பாவத்திலிமிருந்து, அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து *எங்களை மீட்டருளும் இயேசுவே.* அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லாசந்தேகத்திலுமிருந்து *எங்களை மீட்டருளும் இயேசுவே.* உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து *எங்களை மீட்டருளும் இயேசுவே.* எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து *எங்களை மீட்டருளும் இயேசுவே.* உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூயசூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம் *எங்களை மீட்டருளும் இயேசுவே.* உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று.. *(பதில்:-உம்மை மன்றாடுகிறோம்.)* அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று.. நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று... எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று... எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று... உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம்.. உமது அற்புத திருச்சுரூபபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று.. இறைமகனே, மரிமகனே, இயேசுவே உம்மை மன்றாடுகிறோம் உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, *எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.* உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.* உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, *எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே.* *செபிப்போமாக:-* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻  எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவே! தேவரீர் சிறு குழந்தையாய்ப் பிறந்து உமது தெய்வீகத்தையும் நீரெடுத்த மனுஷீகத்தையும் சிறுமையான ஸ்ததியில் தாழ்ந்து திருவுளமானீரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது. உமது பாலத்துவத்தில் உமக்கு உண்டாயிருந்த திவ்விய ஞானத்தையும் பலவீனத்தில் வல்லமையையும் தாழ்ச்சியில் மகிமையையும் நாங்கள் அறிந்து இப்பூலோகத்தில் தாழ்ந்தப்பட்டவராகிய உம்மை ஆராதித்த பின்பு மோட்சத்திலே நீர் அடைந்திருக்கிற மகிமைப் பிரதாபத்தைத் தரிசிக்கவும் நித்திய பேரின்பத்தை அனுபவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி. *ஆமென்.🙏🏻* 🌸🌻🌸🌻🌸🌻🌸🌻 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat