#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🔶பாஜக #🙋♂️அண்ணாமலை காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சொந்தமான சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகளை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வனத்துறை அதிகாரிகள் இன்று (திங்கள்கிழமை) ஸ்ரீ மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த யானைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காக திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வனத்துறையின் யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இம்மாதம் 7-ஆம் தேதி நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் பேரில், யானைகளை மீண்டும் மடத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதன்படி, திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட 3 யானைகளும் காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மடத்தின் கஜசாலையில் பராமரிக்கப்பட உள்ளன.


