ShareChat
click to see wallet page
search
செத்து விட முடியாத ஒரு இருத்தல் விட்டுவிட முடியாத ஒரு உறவு பிடித்துவைக்க முடியாத நேசம் பிடித்திடாத வாழ்தல் அத்தனையும் சேர்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும் அவள் அவளுக்குப்பிடித்த வாழ்தல் என்று ஏதுமில்லை சபிக்கப்பட ஒரு வாழ்தலோடு ஒன்றிப்போனவள் விடியலைப்பற்றி அறியாத ஒரு கும்மிருட்டில் வாழப்பழகியவளுக்கு சூரிய ஒளியின் கதகதப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் அவளுக்கு எந்த தேடலும் இல்லை இருக்கும் இடத்தை ஒளிமயமாய் வைத்திருப்பதாய் நம்பி வாழ்கிறாள் சிறகுடைந்த பறவைக்கு கால்கல் இருப்பது போதும் என நம்புகிறாள் அவள் சிறகுகளின் காயங்கள் ஆறி பலகாலமானது புரியாமலே இன்னமும் முடங்கிக்கிடக்கிறாள்… பறப்பது சிரமம் இல்லை ஆனால் எங்கு பறப்பது என்பது தான் அவளின் பெருங் கேள்வி வானம் விரிந்துகிடந்து என்ன பயன் பிடித்திருக்கும் பிஞ்சு விரல்களைத்தாண்டி உலகில் அவள் எங்கு போவாள் ? கூண்டுப்றவை அல்ல அவள் தானே அடைபட்டுக்கொண்டவள் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள் அவள் கையாலாகதவள் என்று எந்தப்பெயராவது இருந்துவிட்டுப்போகட்டுமே விதைக்கப்பட்ட விதை விருட்ஷம் ஆகும் எனும் பெருங்கனவு பிடித்திருக்கும் பிஞ்சு விரல்களாய் இருக்கும்போது அவள் அப்படித்தானே வாழவேண்டி இருக்கிறது அவள் வெளிச்சமெல்லாம் அந்த பெருவிருட்ஷக்கனவு என்பதால் இருள் அவளை ஏதுமே செய்யவில்லலை... #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💞Feel My Love💖