அவள்… வீணாவதை உயிராக்கும் பெண்
அவளுடைய வீட்டில்
“குப்பை” என்று ஒரு வார்த்தையே இல்லை.
சமையலறையின் ஓரத்தில்
மூன்று சிறிய பாத்திரங்கள் இருக்கும்.
ஒன்று —
மனிதர்களால் மிச்சமாகும் சாதம், கறி, காய்கறிகள்.
இரண்டாவது —
பழத் தோல்கள், பழைய ரொட்டி,
சிறிது உலர்ந்த இட்லி, தோசை துண்டுகள்.
மூன்றாவது —
எலும்புகள், மீன் தலைய்கள்,
நாய்கள் விரும்பும் வலுவான உணவுகள்.
அவள் ஒவ்வொன்றையும்
“யாருக்காக” என்று தெரிந்தே பிரிப்பாள்.
நேற்றிரவு மிச்சமான சாதம்
குளிர்பதன பெட்டிக்குப் போகவில்லை.
அதை ஒரு துணியில் பரப்பி,
காற்றில் சற்றே உலர வைத்தாள்.
அடுத்த நாள் காலை,
அதை மிருதுவாக நொறுக்கி,
சிறிது தண்ணீர் சேர்த்து
பசுக்களுக்கான உணவாக மாற்றினாள்.
“குளிர்ந்த சாதம் வயிற்றுக்கு கஷ்டம்…”
என்று அவள் உயிர்களைப் போலவே நினைத்தாள்.
வீட்டில் பழம் அதிகமாக பழுத்துவிட்டால்,
அதை எறியவில்லை.
சிறு துண்டுகளாக நறுக்கி,
வெயிலில் வைத்து
பறவைகளுக்கான உலர் உணவாக மாற்றினாள்.
மாடியின் ஓரத்தில்,
ஒவ்வொரு காலையும்
சிட்டுக்குருவிகள் அவளுக்காக காத்திருந்தன.
“உங்களுக்கு நான் எப்ப வருவேன்னு டைம் தெரியுமா என்ன?…”
என்று சொல்லும்போது,
அவள் குரல் சிரிப்புடன் நனைந்திருந்தது.
அவள் தெருவில் நடக்கும் போது
கையில் எப்போதும் ஒரு பை.
அதில் —
அரிசி பொடி கலந்த சர்க்கரை,
பழைய ரொட்டி தூள்,
மிச்சமான கறி தண்ணீர்.
பால் அல்லது தயிரை கொஞ்சம் தண்ணீர் கலந்து பாட்டிலில் எடுத்துக் கொள்வாள்.
அரிசி பொடியை அவள் நடந்து செல்லும் பாதை ஓரத்தில் உள்ள எறும்புகளுக்கு போடுவாள்.
சில நேரம் கோவில்களுக்கு கொண்டு சென்று கோவிலை சுற்றி உள்ள இடத்தில் தூவிவிடுவாள்.
அது எறும்புகளுக்கான உணவு.
ஒரு நாய் நடுங்கியபடி
குப்பைத்தொட்டியைச் சுற்றி நின்றால்,
அவள் அதற்காக
தன் பையில் இருந்த பால்,தயிர்,கறித்தண்ணீர், ரொட்டி.எது உள்ளதோ அதை எடுத்து
அமைதியாக தரையில் வைப்பாள்.
“அஞ்சாதே… சாப்பிடு…”
என்று சொல்லும் அந்த வார்த்தை,
அவளின் இதயத்திலிருந்து வந்தது.
இலவச ரேஷன் அரிசி
அவள் வீட்டில்
ஒரு “தானியமல்ல”.
அது —
பல உயிர்களின் நாளை.
அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று
மீதமாக இருக்கும் அரிசியை கேட்டு சேகரித்து,
பெரிய பாத்திரத்தில் சமைத்து,
அரைவேகத்தில் இறக்குவாள்.
“நாய்க்கு சற்று கடினமா இருக்கணும்…”
“பசுவுக்கு நன்றாக மென்மையா இருக்கணும்…”
அவள் சமையல்
உயிர்களின் தேவைக்கு ஏற்ப மாறும்.
மழை நாட்களில்
அவள் இன்னும் கவனமாக இருப்பாள்.
வெளியில் உணவு கெட்டுப்போகாதபடி,
இலைகளில் மூடி,
உயரமான இடத்தில் வைத்து,
ஒவ்வொரு உயிரும் நிம்மதியாக சாப்பிடுமாறு பார்த்துக் கொள்வாள்.
ஒருநாள்,
ஒரு சிறு நாய் குட்டி
பசியில் சோர்ந்து விழுந்திருந்தது.
அவள் வீட்டில் இருந்த
சாதம் நீர்,
சிறிது அரிசி கஞ்சி,
அதை மெதுவாக குடிக்க வைத்தாள்.
அந்த குட்டி
அவள் கையை நக்கி பார்த்தது.
அவள் கண்களில்
மௌனமாக ஒரு கண்ணீர்.
“உனக்கு இதுக்கெல்லாம்
நேரமும் சக்தியும் எங்கிருந்து?”
என்று ஒருவர் கேட்டபோது,
அவள் சொன்னாள்:
“நான் சேமிக்கிறது உணவு இல்ல…
நான் சேமிக்கிற உயிர்கள்.”
அவள் போகும் இடமெல்லாம்
குப்பை குறைந்தது.
பசி குறைந்தது.
அவள் பெயர்
யாருக்கும் தெரியாது.
ஆனால்,
ஒவ்வொரு தெருவிலும்
ஒரு உயிராவது
அவளை அறிந்திருக்கும்.
அவள் —
வீணாவதை உயிராக்கும் பெண்.
நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள மிச்சமான உணவுகளை வீணாக்கி குப்பையில் போடாமல்.இவளைப் போல சிந்தித்தால் பல ஜீவன்களின் பசியைப் போக்கலாம்.
ஒவ்வொரு நாளும் பல உயிர்களுக்கு அன்னதானம் செய்து அன்னபூரணியாக வாழலாம் 🙏🙏🙏🙏 #🐱அழகிய பூனை குட்டி #🐶Pet Love❤ #🐕செல்ல பிராணி #🐕செல்ல பிராணிகள் வீடியோ🐈 #ஆன்மீகம்....பக்தி....


